Friday, March 9, 2012

மின்வெட்டை கண்டித்து அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்



அவினாசி ஒன்றிய , நகர  கொங்குநாடு முன்னேற்ற கழகம்  சார்பாக , தமிழ்நாட்டில்  நிலவிவரும்  அபரிமிதமான  மின்வெட்டு  மற்றும்  பல்வேறு  பிரச்சனைகள்  சம்மந்தமாக 09 /03 /2012  அன்று  காலை 09 -00  மணியளவில்  அவினாசி பாலச்சந்தர்  மருத்துவமனை  அருகில் " மாபெரும்  ஆர்ப்பாட்டம் " நடைபெற்றது .
                               ஆர்ப்பாட்டத்திற்கு கொ.மு.க மாநில ஒருங்கிணைப்பாளர்  திரு.பொன்னுகுட்டி அவர்கள்  தலைமை  தாங்கினார் , மாநில செயற்குழு  உறுப்பினர் திரு.விநாயக செல்வராஜ் , திருப்பூர்  வடக்கு மாவட்ட  செயலாளர்  திரு.V . லோகநாதன் ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  திரு.சுதர்சன் கந்தசாமி , ஒன்றிய தலைவர் திரு.S .செல்வராஜ்  ,ஒன்றிய  செயலாளர் 
திரு.S . கணேசன் , ஒன்றிய பொருளாளர்  திரு . S .அவினசியப்பன் ,ஒன்றிய மாணவரணி செயலாளர் கொங்கு சங்கர் மற்றும் திருப்பூர் மாநகர செயலாளர்  திரு.ரோபோ ரவி  ஆகியோர்  முன்னிலை வகித்தனர் .
                              சிறப்பு  அழைப்பாளராக மாநில துணை பொருளாளர் 
திரு.G .K .நாகராஜ் அவர்கள்  கலந்து கொண்டனர் . ஆர்பாட்டத்தில் பின்வரும்  கோரிக்கைகள்  முன்வைத்து  முழக்கங்கள்  எழுப்பப்பட்டன .
  • தமிழ்நாட்டில்  நிலவிவரும்  அபரிமிதமான  மின்வெட்டை  உடனடியாக  தளர்த்தி  தடையில்லா மின்சாரம்  வழங்கவேண்டும் .
  •  விசைத்தறி , பனியன்  தொழில்களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் .
  • விவசாய் விளைபொருட்களுக்கு மாநில அரசு நியாயமான விலைநிர்ணயம்  செய்யவேண்டும் .
  •  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை  விவசாயத்திற்கு பயன்படுத்த  ஆவண செய்ய வேண்டும் .
ஆர்பாட்டத்தில்  திரளான  மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர,கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . ஒன்றிய பேச்சாளர் திரு .ஜெயச்சந்திரன் நாயக்கர் நன்றி  கூறினார் .
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்
                                                                                                

No comments:

Post a Comment