Thursday, March 3, 2011

கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு

வெள்ளி : மார்ச் 4, 2011:

கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு

அருள்பரவும் வேளாளர் பயிர்வளர்த்தால் நீதி அந்தணர் வேள்வி வளரும் அன்பினோடு இவர்கள் படைவாளெடுத்தால் வெற்றி அரசர் படைவாள் எடுக்கும் கருது தானியராசி இவர் குவித்தால் வணிகர் கனகராசியெலாம் குவிப்பர் காதலுடன் ஏர்த்தொழில் நடத்தினால் மற்றுள்ளோர்கைத்தொழில் எல்லாம் நடக்கும் உரிய வள்ளத்தில் இவர் அளந்த பின் நாரணன் உயிர்க்கெல்லா படி அளப்பான் ஓதரிய வேளாளர் பெருமையால் அன்றிமற்று உலகில் ஒரு பெருமையுண்டோ?"

கொங்கு வேளாளர்
சங்க இலக்கியங்கள் எல்லாம் கொங்கு வேளாளர்களின் குடியியல்,வாழ்வியல்,உழைப்பு,பண்பாடு,அறிவியல்,மருத்துவ அடிப்படையிலான சடங்குகள்,குணவியல்புகள்,ஆகிய வற்றையெல்லாம் கூறுகின்றன.

13ஆம் நூற்றாண்டில் விஜய ந‌க‌ர‌ப் பேர‌ர‌சு கொங்கு நாட்டை 24 நாடுக‌ளாக‌ப் பிரித்தாண்ட‌து.ஊர்த்த‌லைவ‌ர்க‌ள் பெய‌ரால் ஊர்க‌ள் அமைந்தன. த‌ற்கால அமைப்புப‌டி கோவை, சேல‌ம், க‌ரூர், நாம‌க்க‌ல், ப‌ல்ல‌ட‌ம், ப‌ழ‌னி, தாராபுர‌ம், த‌ர்ம‌புரி ஆகியன கொங்கு நாட்டில் அட‌ங்கி இருந்தன.

இந்திய வ‌ர‌ல‌ற்றில் விடுத‌லைப் போருக்கு முத‌லில் வித்திட்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்தாம்.த‌மிழ் நாட்டில் விடுத‌லைப்போருக்கு முன்னோடியாக இருந்து, வீர‌ம் விளைவித்ட‌வ‌ன் தீர‌ன் சின்ன‌ம‌லை.

தீர‌ன் சின்ன‌ம‌லை க‌ரியான் ச‌ர்க்க‌ரை ம‌ன்றடியாரின் பேர‌ன் ஆவார். மேல‌ப்பாளைய‌ம் காணியாளர் இர‌த்தின‌த்தின் ந‌க‌னாவார்.கி.பி.1756 இல் பிறந்தார். இவ‌ர் அண்ணன் குழ‌ந்தைசாமி, த‌ம்பிசாமி, கிலேதார், குட்டிசாமி ஆகிய மூன்று த‌ம்பிய‌ர்க‌ளை உடைய‌வ‌ர்.இவ‌ர‌து இய‌ற்பெய‌ர் தீர்த்த‌கிரி. வேளாண்குடியில் பிறந்திருந்தாலும் சிறுவ‌ய‌தில் சில‌ம்ப‌ம், வாள், வேல், ப‌யிற்சியில் ஈடுப‌ட்டார். தீர்த்தகிரி த‌ம்பியும், கிலேதாரும் இவ‌ருட‌ன் விட்ட‌ன‌ர். போர்ப் ப‌யிற்சியில் ஆர்வ‌ம்கொண்ட தீர்த்த‌கிரி திப்புவின் ப‌டையில் கி.பி.1775 இல் சேர்ந்தார். த‌ள‌ப‌தியானார். இர‌ண்டாவ‌து, மூன்றாவ‌து போர்க‌ளில் த‌ளப‌தியாக இருந்து ஆங்கில ப‌டைக‌ளை அழித்தார்.

கொங்கு நாட்டு வ‌ரிப்ப‌ணம் திப்புவுக்குச் செல்லாம‌ல் வழி ம‌றித்துப்பிடுங்கினார், ஆங்கிலேய‌ரின் வ‌ரிப‌ணத்தையும் பிடுங்கி கோவை நாட்டில் த‌னி அர‌சு அனமைத்து ஆண்டார். நொய்ய‌ல் ஆற்றின்மேல் க‌ரையில் ஓடாநிலையில் அரண்ம‌னையும், கோட்டைக‌ளையும் க‌ட்டினார்.கி.பி.1779 இல் திப்பு இறந்த‌பின் ஆறு ஆண்டுக‌ள் கொங்கு நாட்டை ஆண்டார். ஆங்கில ஆதிக்க‌த்தை எதிர்த்து நான்குபோர்கள் செய்து வெற்றி பெற்றார். கி.பி.1805 இல் வெள்ளைய‌ரின் வ‌ஞ்ச‌னை வ‌ளையில் சிறைப்ப‌ட்டார். ச‌ங்க‌கிரி கோட்டையில் தூக்கிலிட‌ப்ப‌ட்டார். அவ‌ர‌‌து உயிர்மூச்சு விடுத‌லைப் போருக்கு வித்திட்டது.

பண்டைய‌ கொங்குநாடுகள்‌‌

கொங்குநாடுகள்
இன்றைய‌ ப‌குதிக‌ள்

1).பூந்துறை நாடு
ஈரோடு,திருச்ச‌ங்கோடு.

2)தென்க‌ரை நாடு
தாராபுர‌ம், காங்கேய‌ம்.

3)காங்கேய‌ நாடு
தாராபுர‌ம்,கரூர்.

4)பொங்க‌லூர் நாடு
ப‌ல்ல‌ட‌ம், தாராபுர‌ம்.

5)ஆறை நாடு
கோவை,அவினாசி.

6)வார‌க்கா நாடு
ப‌ல்ல‌ட‌ம் பொள்ளாச்சி

7)திருஆவின் ந‌ன்குடி நாடு
ப‌ழ‌னி, உடும‌லை.

8)ம‌ண நாடு
க‌ரூர் தென்மேற்குப‌குதி

9)த‌லையூர் நாடு
க‌ரூர் தெற்கு, மேற்கு

10)த‌ட்ட‌யூர் நாடு
குளித்த்லை

11)பூவாணிய‌ நாடு
ஓம‌லூர், த‌ர்ம‌புரி

12)அரைய‌ நாடு
ஈரோடு, நாம‌க்க‌ல்

13)ஒடுவ‌ங்க‌ நாடு
கோபி

14).வ‌ட‌க‌ரை நாடு
ப‌வானி

15).கிழ‌க்கு நாடு
க‌ரூர்,குளித்த‌லை

16).ந‌ல்லுருக்காநாடு
பஉடும‌லைப்பேட்டை.

17).வாழ‌வ‌ந்தி நாடு
நாம‌க்க‌ல் வ‌ட‌க்கு, க‌ரூர்

18).அண்ட‌ நாடு
ப‌ழ‌னி தென்கிழ‌க்கு

19).வெங்கால‌ நாடு
க‌ரூர் கிழ‌க்கு

20).காவ‌ழ‌க்கால‌ நாடு
பொள்ளாச்சி

21).ஆனைம‌லை நாடு
பொள்ளாசி தென்மேற்கு

22)இராசிபுர‌ நாடு
சேல‌ம், ராசிபுர‌ம், கொல்லிம‌லை

23).காஞ்சிக் கோயில் நாடு
கோபி, ப‌வானி.

24)குறும்பு நாடு
ஈரோடு

கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.
இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

சமுதாய அமைப்பு

கொங்கு வேளாளர் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து, அந்த குழுக்களை குலங்கள் என்றும், கூட்டங்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட தங்கள் குலத்தை (கூட்டத்தை) சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுக்குள், அதாவது பங்காளிகளுக்குள், திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

 குலதெய்வம்

குல(கூட்ட)ப் பிரிவுகள் சிறுப்பிரிவாக பிரிந்து தங்களும், தங்களுடைய சந்ததிகளும் வழிப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் அவர்களுக்கு பிடித்த சாமி சிலைகளை அமைத்தனர். அந்த சாமிகளை குலதெய்வமாக வழிப்பட ஆரம்பித்தனர். தற்பொழுது பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உரிமை வாரிசுகளாக குலத்தெய்வக் கோவில்களுக்கு உள்ளனர் என்பது சிறப்பு. அவர்களே தங்களுடைய குலத்தெய்வக் கோவில்களை சில வருடங்களுக்கு ஒருமுறை செப்பனிட்டுக் கொள்கின்றனர்.

2 comments:

  1. அன்பு நண்பரே,வணக்கம்.தங்களது வலைப்பதிவு நமது சமூகம் பற்றிய விபரங்கள் கொடுப்பதாக உள்ளது.வாழ்த்துக்கள்.paramesdriver.blogspot.com,konguthendral.blogspot.com நன்றி!

    ReplyDelete