Thursday, March 3, 2011

கொங்கு நாடு


வெள்ளி : மார்ச் 4, 2011:

கொங்கு நாடு

கொங்கு நாடு , தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கேரளத்துடன் எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ள ஆட்சிப் பகுதியாகும். இங்கு கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய தொழில் நகரங்கள் முக்கிய நகரங்கள் ஆகும். கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்களோடு திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல், திண்டுக்கல் பகுதிகளையும், வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் பகுதியையும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், துறையூர், முசிறி பகுதிகளையும், மைசூர் பகுதியையும் உள்ளடக்கியது. கொங்கு என்ற சொல்லுக்கு கொங்கர்நாடு (கங்கநாடு), என்று பொருள்.




வரலாறு

 

கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான், தமிழர்கள், முதன் முதலில் ஆட்சி முறைகளை அமைத்தனர். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகாமையில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - தருமபுரியின் அதியமான், கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கண்ணுவ குல மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் இப்பகுதி இருந்துள்ளது. தஞ்சைச் சோழர்களான இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்ச் சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்துவந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் உடையார்களின் ஆட்சிக்கு வந்தது. எனினும், மைசூர்ப் பேரரசின் கீழ் கவுண்டர்கள் ஆட்சி மற்றும் படை அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். தீரன் சின்னமலையின் இறப்பிற்குப் பின்னர், இப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சிக் கீழ் வந்தது.

பிராந்தியக் கிளர்ச்சி

 

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்,  இப்பகுதியில் தனிக் கொங்கு நாடு கோரிப் கிளர்ச்சி தொடங்கியது.

1 comment:

  1. அன்பு நண்பரே,வணக்கம்.கொங்கு நாடு பற்றிய விபரங்கள் தங்களது வலைப்பதிவு வாயிலாக வெளிக்கொணரும் தங்களது முயற்சிகளுக்கு எங்களது தேனீக்கள் சேவை அமைப்பின்(HONEY BEES SOCIAL ORGANIZATION-REGD NO-86 / 2010) சார்பாக வாழ்த்துக்கள். நன்றி! BY-PARAMES DRIVER (paramesdriver.blogspot.com,,konguthendral.blogspot.com)

    ReplyDelete