Thursday, March 3, 2011

கொங்கு நாடு


வெள்ளி : மார்ச் 4, 2011:

கொங்கு நாடு

கொங்கு நாடு , தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கேரளத்துடன் எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ள ஆட்சிப் பகுதியாகும். இங்கு கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய தொழில் நகரங்கள் முக்கிய நகரங்கள் ஆகும். கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்களோடு திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல், திண்டுக்கல் பகுதிகளையும், வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் பகுதியையும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், துறையூர், முசிறி பகுதிகளையும், மைசூர் பகுதியையும் உள்ளடக்கியது. கொங்கு என்ற சொல்லுக்கு கொங்கர்நாடு (கங்கநாடு), என்று பொருள்.




வரலாறு

 

கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான், தமிழர்கள், முதன் முதலில் ஆட்சி முறைகளை அமைத்தனர். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகாமையில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - தருமபுரியின் அதியமான், கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கண்ணுவ குல மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் இப்பகுதி இருந்துள்ளது. தஞ்சைச் சோழர்களான இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்ச் சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்துவந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் உடையார்களின் ஆட்சிக்கு வந்தது. எனினும், மைசூர்ப் பேரரசின் கீழ் கவுண்டர்கள் ஆட்சி மற்றும் படை அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். தீரன் சின்னமலையின் இறப்பிற்குப் பின்னர், இப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சிக் கீழ் வந்தது.

பிராந்தியக் கிளர்ச்சி

 

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்,  இப்பகுதியில் தனிக் கொங்கு நாடு கோரிப் கிளர்ச்சி தொடங்கியது.

கொமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்

 மார்ச் 3 :  சட்டமன்ற  தேர்தலில்  கொங்குநாடு முன்னேற்ற கழகம்  திமுக கூட்டணியில்  இணைந்து போட்டியிடுகிறது .. கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு  7 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது .               

நமது  தலைவர்கள்  போட்டியிட விரும்பும் தொகுதிகள் :
                                          
                                               பொள்ளாச்சி
                                               சூலூர்
                                               பல்லடம்
                                              சிங்காநல்லூர்
                                              கரூர்
                                             அரவங்குறிச்சி
                                             திருச்சங்கோடு
                                            அந்தியூர்
                                            பெருந்துறை   

கொமுக  சார்பில்  மாநில  பொருளாளர்  பாலசுப்ரமணியம் , பொது செயலாளர்  E .R .ஈஸ்வரன் , கோவை  மாநகர் மாவட்ட  செயலாளர் ஜி.கே . நாகராஜ் , மாணவரணி செயலாளர்  லோகநாதன் , ஈரோடு மாவட்ட  செயலாளர்
K.K.C பாலு  உள்ளிட்டோர்  வேட்பாளர்களாக  களம்  இறங்க  திட்டமிட்டுள்ளனர் ..

சாதி வாரி கணக்கெடுப்பு

 மார்ச் 3 : வரும் ஜூலை மாதம் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடக்கிறது
அதற்குள் நம் சாதியின் சரியான பெயரை நாம் சரிபார்க்க வேண்டும் . ஒவ்வொருவரது சாதி சான்றிதழில் கீழ்க்கண்ட வெவ்வேறு பெயர்கள்
உள்ளன
கொங்கு வெள்ளாள கவுண்டர்..?

கொங்கு வேளாள கவுண்டர்..?

கொங்கு வெள்ளாளர்..?

கொங்கு வேளாளர்..?

வெள்ளாள கவுண்டர்..?

இதில்
சரியான பெயர் எது? என்று கண்டறிய நமது சாதியின் தெளிவான கூட்டங்கள்
பட்டியல் ,கொங்கு வரலாறு போன்றவற்றை ஆராய்ந்தாலே சரியான பெயரை நம்மால்
கண்டறிய முடியும் .இது நம் சமுகத்துக்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை .
மூன்று மாதங்களே உள்ளது விரைந்து செயல்பட்டால் குழப்பத்தை தவிர்க்க
முடியும் .நமது சென்சஸ்!! நமது எதிர்காலம் !!

கொ.மு.க ஏன் இப்படிப்பட்ட தேர்தல் முடிவுகள்..?



 மார்ச் 3 : அதிமுக, திமுக இரு அணியிலும் சட்ட மன்ற தேர்தலுக்கு
கூட்டணி அழைப்பு வந்தது..!

அதிமுக தரப்பிலே அவர்கள் சொல்லியது:
கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் ஆதரவு தாருங்கள்,
ஆனால்,
உங்களுக்கு எந்த ஒரு தொகுதியும் தர முடியாது..!

அடுத்த ஆட்சி வரும் போது அதாவது இன்னும் 5 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு

2 அல்லது 3 தொகுதிகள் தருகிறோம்
என்று சொல்லுகையில்,

நம்முடைய ஆதரவு எதற்கு தர வேண்டும்..?
கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் ஆதரவு எதற்கு..?

இது தான் வருகிற சட்ட மன்ற தேர்தலுக்கு பேசுகிற தோரனையா..?
கொ.மு.க வின் அசுர வளர்ச்சியையும்,நன்மதிப்பையும் பற்றி தெரிந்தும் நடந்து கொள்ளும் விதமா..?
அதற்கு கொ.மு.கவிடம் அதிமுக பேசாமலே இருந்திருக்கலாமே..?
விஜயகாந்த் கட்சி வந்தவுடன் இப்படி நடந்து கொள்ளுவது ஒரு கேவலமான செயல்..?
விஜயகாந்த் கட்சி வருவதற்கு முன்பு கொ.மு.க இனித்ததோ..?

இப்படி பட்ட அடிப்படை பண்பும்,நாகரீகம் இல்லாதவர்களோடு கூட்டணி வேண்டாம் என்று கொ.மு.க தீர்மானித்தது..!

மறுபுறம்

திமுக தரப்பிலே அவர்கள் சொல்லியது:

நாங்கள் கொ.மு.க அசுர வளர்ச்சி,நன்மதிப்பையும்,செயல்பாடுகளையும் நன்கு அறிந்தவர்கள்..!
வாய் வழி பேசாமல் செயல் வழியிலே செய்து முடிப்பவர்கள் தான் கொங்குநாடு முன்னேற்ற கழகம்..!

நம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து
7 தொகுதிகளை கொடுத்து நல் ஆதரவும் தந்து உள்ளார்கள்.

அது போக,
நம்மை மிகவும் குறைவாக எடை போட்டு

கொங்குநாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத

அகங்காரம்,
ஆனவம்,
அவம்பாவம்,
பிடித்த அதிமுக ஜெயலலிதாவுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டி,

நிற்கிற அத்தனை தொகுதிகளிலும் வெற்றி வாகை அணிந்து,
திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் என்ற
சுளுரை ஏற்போம்..!

திமுக வுடன் கொமு க கூட்டணி



 மார்ச் 3 : கொங்கு நாட்டு காவலர்  மரியாதைக்குரிய  திரு . பெஸ்ட் ராமசாமி  அய்யா  அவர்களும்  நமது   கொங்கு நாட்டு தளபதி  திரு . E .R .ஈஸ்வரன்  அண்ணன்  அவர்களும்  நமது  கழக  பொருளாளர்   திரு. பாலசுப்ரமணியம்  அண்ணன்  அவர்களது முன்னிலையில்  நமது கட்சியின்  கூட்டணி பற்றி  திமுக வுடனும் ஆதிமுக வுடனும்  கடந்த  1  மாத காலம்  நடைபெற்றது.
                                                                                                            
                                                                                                              ஆதிமுக தரப்பிலே  நமக்கு  3  சட்ட மன்ற தொகுதிகள்  தருவதாக கூறினர் , ஆனால்  நாம் கேட்ட தொகுதிகளை  தர மறுத்துவிட்டனர் ..     திமுக  தரப்பிலே  நமக்கு  5   சட்ட மன்ற தொகுதிகள் தருவதாக கூறினர் , அதுவும் நாம் கேட்ட தொகுதிகளை தருகின்றோம்  என்றும்  நமது கோரிக்கையையும் அவர்கள்  ஏற்றுகொண்டார்கள்  . பிறகு இரு கட்சிகளுடனும்  சுமார் 1  மாத காலம்  பேச்சுவார்த்தை  நடத்தினார்கள் ....கடந்த மார்ச் 1 ம்  தேதி  தேர்தல் நாள்( ஏப்ரல் 13 )  வெளியிடப்பட்டது . பிறகு மார்ச் 2 ம்  நாள் நமது கூட்டணி பற்றி  சென்னையில்   மாநில பொது குழு  கூட்டம்  நடைபெற்றது ....இறுதியில்
திமுக  வுடன்  கூட்டணி  என்று  நமது கட்சி தலைவர்கள்  முடிவெடுத்தனர் .

                                                                            அன்று  இரவு 11  மணி அளவில்  கலைஞரின்  இல்லத்திற்கு   சென்று  நமது  தலைவர்  திரு . பெஸ்ட் ராமசாமி  அய்யா அவர்கள் கூட்டணி  ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டார் ....

  திமுக வில்   நமக்கு  7   சட்ட மன்ற தொகுதிகள் + 1 சட்ட மேலவை உறுப்பினர் (MLC) சீட்டுகள்   நமக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது ....

Tuesday, February 15, 2011

தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு






தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட வீரர்.

வரலாறு

இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்களாம்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார்சங்ககிரி வழியாக மைசூர்சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று. அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம்
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும்கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான்கொங்குப்படைநெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.
நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர், தாழ்த்த பட்டோர், தேவர், வன்னியர், நாடார் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

வெற்றி

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

தூக்கிலிடப்படல்

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.
சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

கௌரவிப்பு

முன்பு தீரன் சின்னமலை நினைவாகப் திருச்சிராப்பள்ளியைசென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு



Monday, February 14, 2011

கொங்கு சாம்பியன் 2011

பிப்ரவரி 6 , 2011  : கொங்குநாடு  முன்னேற்ற   கழகம்  மற்றும் கொங்குநாடு ஸ்போர்ட்ஸ்  அகாடமி நடத்திய  "அவினாசி ஒன்றிய  கிரிக்கெட்  திருவிழா"வின்  நிறைவு  விழாவில்  கொங்கு நாட்டு காவலர்  திரு. பெஸ்ட் ராமசாமி  அய்யா அவர்கள்  தலைமையில் , விநாயக செல்வம்  அவர்கள்  முன்னிலையில்   விழா நடைபெற்றது . விழாவில்  பெஸ்ட் ராமசாமி  அய்யா  சிறப்புரையாற்றி  பரிசுகள்  வழங்கினார். இவ்விழாவில்  மாநில  ஒருங்கிணைப்பாளர்  பொன்னுகுட்டி,  அவினாசி  ஒன்றிய அமைப்பாளர்  V.லோகநாதன் ,  மாவட்ட  செயற்குழு  உறுப்பினர் R.A. சுந்தரம்  , மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  சுதர்சன்  கந்தசாமி , அவினாசி நகர செயலாளர்  மெடிக்கல் மூர்த்தி , மாணிக்கராஜ்  ஆகியோர்  விழாவில்  கலந்து கொண்டனர் . இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  அவினாசி  ஒன்றிய இளைஞர்  அணி செயலாளர் A.K.ராஜ்   மற்றும்  ஒன்றிய மாணவரணி செயலாளர் A.ரவி சங்கர்  ஆகியோர் முன்னின்று  நடத்தினர் .
                                                              பரிசு பெற்ற அணிகள்
   
                                             முதல் இடம்    -- கொங்கு டைகர்ஸ்  

                                             இரண்டாம் இடம்   -- பெருந்துறை லெவன் ஸ்டார்ஸ்

                                            மூன்றாம் இடம் --  XXX  பாய்ஸ்  புளியம்பட்டி  

                                             நான்காம்  இடம் --  ஸ்டார்  காய்ஸ்