Saturday, March 3, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாபெரும் ஆர்பாடாம்

வருகின்ற  மார்ச் 9 ஆம் தேதி  (வெள்ளி கிழமை) "அபரிமிதமான  மின்வெட்டுக்கு மற்றும் விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி" ஆர்பாட்டம் .

 தேதி :  09.03.2012
 இடம்  : பாலச்சந்தர்  மருத்துவமனை , அவினாசி 
 நேரம் : காலை 9  மணி  

நன்றி !! நன்றி !! 
கொங்கு சங்கர்
 

Sunday, February 26, 2012

கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு கூட்டம்


அவினாசி ஒன்றியம் கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு  கூட்டம்  கருவலூர்  கொங்கு மண்டபத்தில் இன்று ( 26.2.2012) மாலை 6  மணிக்கு  நடைபெற்றது . கூட்டத்திற்கு  திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
 V . லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S . கணேசன் , மற்றும் ஒன்றிய  கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் . கூட்டத்தில் கருவலூர் வட்டார  நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டு அறிவிக்க பட்டது .

 கருவலூர்  ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : N .ரங்கசாமி 
செயலாளர்  : A .பழனிசாமி  

உப்பிலிபாளையம்   ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : கந்தசாமி
செயலாளர்  : M .சிவசாமி 

ராமநாதபுரம்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : P .சண்முகம்

செயலாளர்  : M .மணி (எ ) நாராயணசாமி 

கானூர்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : A.சிவசுப்ரமணியம்

செயலாளர்  : P .வேலுசாமி 

நம்பியாம்பாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       : ராமசாமி

செயலாளர்   : M .குருசாமி 

வேட்டுவபாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       :  ஆண்டவ மூர்த்தி 

செயலாளர்   :   சுப்பிரமணியம் 


வட்டார பிரதிநிதிகள் 

செயலாளர்  : M .தர்மராஜ் 
 மயில்சாமி 
 நந்தகுமார்
 S .சம்பத் 
 S .காந்தி  

                                                                                                                                 நன்றி 
                                                                                                                        கொங்கு சங்கர் 
                                

Sunday, February 19, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் கலந்தாய்வு கூட்டம

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  அவினாசி ஒன்றியம்  மற்றும்  நகர  கலந்தாய்வு  கூட்டம்  " பூவாசாமி கவுண்டர்  நினைவு "  திருமண  மண்டபத்தில்  19.02.2012(நேற்று ) மாலை 3 மணிக்கு  நடைபெற்றது.
 கூட்டத்தில்.......
              
  •  ஒன்றிய  நகர  நிர்வாகிகள்  தேர்வு .
  • அபரிமிதமான  மின்வெட்டுக்கு  எதிரான  ஆர்ப்பாட்டம் பற்றிய  ஆலோசனை .
  •  விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் .  
போன்ற   விசயங்கள் குறித்து  கலந்தாய்வு  மேற்கொள்ளப்பட்டது . கூட்டத்தில்  V.லோகநாதன் , S . கணேஷ் , விநாயக செல்வம் , R .A .சுந்தரம் , மெடிக்கல் மூர்த்தி , அவினசியப்பன் , சேயூர்  நடராஜ் , குழந்தையப்பா கவுண்டர், ராயப்பன் , பூமகள்  செல்வராஜ் , மாணிக்கம் , P.K.ராஜ்  மற்றும்  ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் .

இறுதியில்  அவினாசி  ஒன்றிய  செயலாளராக  சங்கம்பாளையம்  S .கணேஷ்  அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார். 
வருகின்ற  மார்ச் 9 ஆம் தேதி   "அபரிமிதமான  மின்வெட்டுக்கு மற்றும் விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி"  ஆர்ப்பாட்டம் .  
                                                     நன்றி ! நன்றி ! 

Saturday, February 18, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் 4 ஆம் ஆண்டு விழா


திருப்பூர் வடக்கு மாவட்டம்  அவினாசி  ஒன்றியத்தில் கொங்குநாடு  முன்னேற்ற கழகத்தின்   4 ஆம் ஆண்டு விழா  கொடியேற்றி சிறப்பாக கொண்டாடபட்டது...விழாவில்  வடக்கு மாவட்ட செயலாளர்  V.லோகநாதன் , விநாயக செல்வம் ,  R.A.சுந்தரம் , அவினாசியப்பன் , ரவி சங்கர் மற்றும்  ஒன்றிய  கிளை நிர்வாகிகள்  கலந்து  கொண்டனர் .

Thursday, January 5, 2012

முல்லை பெரியாறு பிரச்சனைகாக தேனியில் கொ.மு.க ஆர்பாட்டம்

முல்லை  பெரியாறு பிரச்சனைக்காக கொங்கு நாடு  முன்னேற்ற கழகத்தின்  பொது செயலாளர்  E.R.ஈஸ்வரன்  அண்ணன்  தலைமை யில் , கழகத்தின்  பொருளாளர்  பாலாசுப்ரமணியம்  மற்றும் பேரவையின் தலைவர் திருச்சி  தேவராஜ்  அய்யா  அவர்களின் முன்னிலையில் நாளை (07.01.2012) தேனியில்  ஆர்ப்பாட்டம் .

இடம்  : பகவதி அம்மன்  கோவில் , தேனி

 நாள் : 07.01.2012(நாளை )

 நேரம் : மதியம் 2  மணிக்கு

 அனைவரும்  வாரீர் !!





Wednesday, December 28, 2011

கோவை செழியன் அய்யா அவர்களின் 81 வது பிறந்த நாள்

கொங்கு நிறுவனர்,கோவை செழியன் அய்யா அவர்களின் பொன்மொழிகள்:


ஒரு சாதியின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் சங்கம் பயன்படுமேயானால், அதை நாம் வரவேற்க வேண்டும். கொங்கு வேளாளர்களிடையே முன்னேற்றத்தையும், கொங்கு நாட்டு மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்.

இந்தியா என்பது கிராமங்களில்தான் உள்ளது. அந்த கிராமத்து உயிர்களால் தான் நாடே வாழ முடியும் என்பது அடிப்படை உண்மை. இது பெரிய படிப்பாளிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்னமும் கிராம மக்களுக்கு முன்னேற்றம் என்பது கனவாகவே உள்ளது. ஆட்சியாளர்கள் விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வில்லை. நம்முடைய பரம்பரை தொழிலே விவசாயம் தான். ஒரு காலத்தில் விவசாயத் தொழிலுக்கு மதிப்பும், மரியாதையும், பெருமையும் இருந்தது. வள்ளுவர் கூட உலகமே உழவர்கள் பின்னால் இருப்பதாக கூறினார். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற தொழில்களிலே மிகவும் மோசமான தொழிலாக விவசாயம் வந்து விட்டது. இந்நிலை மாற வேண்டும். மேலும் இந்தியாவின் ஒரு பகுதி மழை பெய்து வெள்ளத்தால் அழிகிறது. மற்றொரு பகுதியில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எதிர்கால நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்படும் ஆட்சி இல்லாததுதான் இதற்கு காரணமாகும்.

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சாதிவாரியாக கணக்கெடுத்து அந்த மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பெரும்பான்மையாக உள்ள நமது இனத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பணிகளில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலும், அரசின் நலத் திட்டங்களும் நம்மை முழுமையாக வந்து சேரும்.

இன்னும் பல,

-கொங்கு நிறுவனர்,கோவை செழியன் அய்யா அவர்கள்.!
 
முடியும் முடியும் நம்மால் முடியும்

கொங்கு செழித்தல்....!!!!
எங்கும் செழிக்கும்....!!!!