Monday, March 7, 2011

தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து


வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங் கூட பெரிய ஆபத்தாகி விட்டது.
சமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை.
இயற்கை மொழிகளின் மூல வடிவம் ஒலியே. வளர வளர வரப்பெற்று மொழிக்கு முழுமை தருவது வரி வடிவமாகும். தமிழுக்கே உரித்தான ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் 'கிரந்த எழுத்துகள்' எனப்படுகிறவற்றைக் கொண்டு சிதைக்கும் முயற்சிகள் சில நூற்றாண்டுகள் முன்பே தொடங்கி விட்டன. இந்த முயற்சிகள் கணி உலகிலும் (கணிப்பொறி, கணினி, கணி) பரவி விட்டதுதான் இப்போது புதிய செய்தி. இச்செய்தியைப் புரிந்து கொள்வதற்குச் சில இலக்கண வரையறைகளை (விளக்கங்களை) அறிந்து கொள்ள வேண்டும்.
1) கிரந்த எழுத்துகள் : நமக்கு நன்கு தெரிந்த சில கிரந்த எழுத்துகள் ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவை. ஸ்ரீ,  ஆகியவை நாமறிந்த கிரந்தக் கூட்டெழுத்துகள். ஆனால், இவை மட்டுமல்ல, கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகளும் 34 மெய் எழுத்துகளும் உள்ளன.
கிரந்தம் ஒரு மொழியன்று. எழுத்து வடிவம் இல்லாத சமற்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரி வடிவமே கிரந்தம் . இதன் பிறப்பிடம் வடநாடன்று, தென்னாடே.
சமற்கிருதத்தின் இயல்பான வரி வடிவம் தேவநாகரி எழுத்துமுறையே ஆகும். இந்தி, குசராத்தி, மராத்தி, வங்கம் போன்ற பல வட இந்திய மொழிகளுக்கும் தேவநாகரியே சிற்சில மாறுபாடுகளுடன் எழுத்துமுறையாகப் பயன்படுகிறது - உரோமானிய எழுத்து முறையே ஆங்கிலம், பிரெஞ்சு, இசுப்பானியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வரி வடிவமாகப் பயன்படுவது போல.
ஆனால் தமிழுக்கென்று தனி எழுத்துமுறை உள்ளது. திராவிட மொழிக் குடும்பம் என்று தவறாகப் பெயரிட்டழைக்கப்படும் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி எழுத்து முறைகள் உள்ளன.
மலையாள மொழியானது வடமொழிக் கலப்புக்கு முழுமையாக இடமளிக்கும் பொருட்டு ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துகளைத் தன் நெடுங்கணக்கிலேயே இணைத்துக் கொண்டு விட்டது. தெலுங்கு, கன்னடம் பற்றி நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் மொழிக் கலப்பில் நாட்டம் கொண்டவர்கள் அல்லது அது பற்றிக் கவலைப்படாதவர்களான பல தமிழர்கள் கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுதும் வழக்கம் இருந்தாலும், தமிழ் நெடுங்கணக்கில கிரந்தத்தை நாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிரந்தம் இருந்தாலும் கிரந்தமாகவே இருக்கிறது, கலந்தாலும் கிரந்தரமாகவே கலக்கிறது. இப்போது கணியுலக அளவிலாவது கிரந்தத்தைத் தமிழ்க் கணக்கிலும், தமிழைக் கிரந்தக் கணக்கிலும் சேர்;க்க ஒரு முயற்சி நடைபெறுகிறது. இதையே தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து என்கிறோம். எப்படி? இந்தக் கேள்விக்குரிய விடையை விளங்;கிக் கொள்ள இன்னுமொரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதுவே ஒருங்குறி.
2) ஒருங்குறி: கணி(னி) வழியாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தோதாக ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறை தேவைப்படுகிறது. இவ்வாறான பல எழுத்துமுறைகளை உள்ளடக்கிய பன்மொழி எழுத்துமுறைதான் ஒருங்குறி (ரniஉழனந) எனப்படுகிறது. உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு தனிக் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இக்குறியீடு எல்லா வகைக் கணிகளிலும் ஒன்றாகவே இருக்கும்.
ஒருங்குறியில் கொரிய மொழிக்கு 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் சீனம் உள்ளிட்ட மொழிக் குடும்பத்துக்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எழுத்துகள் மிகுதியாய் இருப்பதே காரணம். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியம், தேவநாகரி போன்ற எழுத்துமுறைகள் ஒவ்வொன்றுக்கும் 128 குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழியல்லாத எழுத்து முறையாகிய கிரந்தத்துக்கு இதுவரை தனியிடம் தரப்படவில்லை.
ஒருங்குறி தொடர்பான பணிகளைச் செய்வது ஒருங்குறிச்; சேர்த்தியம் (வாந ருniஉழனந ஊழளெழசவரைஅ) என்னும் பன்னாட்டு அமைப்பு. அரசுகள், (மைக்ரோசாப்டு போன்ற) கணிக் குழுமங்கள், பிற நிறுவனங்கள், தனியாட்கள் இதில் உறுப்பு வகிக்கலாம். தமிழக அரசு முன்பு இதில் உறுப்பினராயிருந்து, பிறகு உறுப்புக் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து இதில் உறுப்பாய் இருந்து வருகிறது.
ஒருங்குறிக் கட்டமைப்பு என்பது பல்வேறு தளங்களால் ஆனது: (1) அடிப்படைப் பன்மொழித் தளத்தில் (Basic Multilingual Plane- BMP) தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. உலக அளவில் இப்போது வழக்கில் இருக்கும் எல்லா மொழிகளும் அவற்றுக்குரிய எழுபதுக்கு மேற்பட்ட எழுத்துமுறைகளும் இத்தளத்தில்தான் உள்ளன. இவை தவிர அதிகமாகப் பயன்படும் எண்-குறிகள், கணிதக் குறிகள், சின்னங்கள், மீக்குறிகள் போன்றவையும் இதில் இடம் பெறுகின்றன. (2) துணைப் பன்மொழித் தளத்தில் (Supplementary Multingual Plane - SMP) வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக் குறிகளும், அரிதாகப் பயன்படும் எழுத்துக் குறிகளும், இசைக் குறிகளும், சிற்சில சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. இது வரலாற்று நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தளமாகும். துணைப் பன்மொழித் தளத்தோடு கூட துணைப் படமொழித் தளமும் (Supplementary Ideographic Plane) உள்ளது. தளங்கள் 3 முதல் 13 வரையிலானவை எதிர்காலப் பயன் பாட்டுக்குரியவை. தளம் 14 சிறப்புக் குறிகளுக்கானது. 15,16 ஆகிய தளங்கள் தனியார் பயன்பாட்டுக்குரியவை.   
எல்லாத் தளங்களிலும் சேர்;த்து மொத்தம் 11 இலக்கத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சொந்தப் பயன்பாட்டுக்குரியவை 1,13,000 ஆகும்.
       ஒருங்குறிச் சேர்த்தியம் 1991ஆம் ஆண்டு தன் பணிகளைத் தொடங்கிய போதிலும், ஒருங்குறியைப் பயன்படுத்துவது 2000ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
       ஒருங்குறி தோன்றிய போதே ஜ, ஸ, ஷ, ஹ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்து வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டன. ஒருங்குறிச் சேர்த்தியம் யாரைக் கேட்டுக்கொண்டு இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. இந்த கிரந்த எழுத்துகளைத் தமிழர்கள் பரவலாகப் புழங்குவது தெரிந்ததே, பள்ளிக் குழந்தைகளுக்கான பாட நூல்களிலும் இந்த எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்துகளை ஏற்றுக் கொள்ளத் தமிழக அரசின் அரசாணையே உள்ளதாம்.
       கிரந்தம் கலந்த தமிழ்; எழுத்துமுறை சமற்கிருத, ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதுவதற்கு (எ-டு: ஜெயம், ஜூனியர்) உதவியாகவும் ஊக்கமாகவும் அமைந்து விட்டது. கிரந்தம் தேவைப்படாத பெயர்களைக் கூட கிரந்தம் கலந்து எழுதுவதைப் பார்க்கிறோம் (சஞ்சய் இவ்விதம் ‘சஞ்ஜய்' ஆகி விடுகிறார். சங்கர் 'ஷங்கர்' ஆகிறார்). இதை விடவும் பெருங்கொடுமை தூய தமிழ்ச் சொற்களை எழுதுவதற்கே கூட கிரந்தத்தைப் பயன்படுத்துவதாகும். மதுக்கடை ஒன்றின் பெயர்ப் பலகை 'குறிஞ்ஜி வொய்;ன்ஸ்' பருக அழைக்கிறது.
       குறிஞ்சி கிரந்த போதையால் 'குறிஞ்ஜி' ஆகித் தள்ளாடக் காண்கின்றோம். மஞ்சள் வணிகத்தில் மார்வாடிகள் - குசராத்தி சேட்டுகள் நுழைந்திருப்பது போல் மஞ்சளில் கிரந்தம் நுழைந்து 'மஞ்ஜள்' ஆனாலும் அஞ்சற்க ('அஞ்ஜற்க'வோ)! கிரந்தமும் ஆங்கிலமும் சேர்ந்து தமிழை விலக்கி வைப்பதற்குச் சான்றாக, காவல்காரன் படத்துக்கு இரசிகர்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டி 'இளைய தளபதி விஜய்' என்று கொண்டாடுகிறது.
       ஒருங்குறியில் நாமறிந்த ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவற்றோடு ஐந்தாவதாக நாம் இது வரை அறியாத ஒரு கிரந்த எழுத்தும் சேர்ந்து விட்டது. இந்த ஐந்தும் தமிழ் எழுத்துகளாகவே குறியிடப்பட்டிருப்பது பெருங்கொடுமை! இதற்கான முன்மொழிவை 'உத்தமம்' என்ற அமைப்பு அனுப்பியதாம்! அமெரிக்காவில் வாழும் தமிழர் - கணிஞர் நா. கணேசன் இதற்குத் தூண்டுதலாம்! இந்தக் கொடுமையை ஒருங்குறியைப் பாரத்துத்தான் தமிழறிஞர்களே தெரிந்து கொண்டார்களாம்! ஆனால் இணையத்தில் இந்த எழுத்தை இருவர் மட்டுமே பயன்படுத்தி வருவது ஆறுதலான செய்தி. இந்த இருவரில் ஒருவர் நா. கணேசன்!
       உத்தமமும் நா. கணேசனும் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பினர்கள். இன்னோர் உறுப்பினர் தமிழ்நாட்டில் இருக்கும் சிறிரமணசர்மா. இவர் கொடுத்த முன்மொழிவு: 26 கிரந்தக் குறிகளை ஒருங்குறிக்குள் கொண்டு வந்து, அதனைத் 'தமிழ் நீட்சி' என அழைப்பதாகும். தமிழை இப்படி நீட்டினால்தான் சமற்கிருதம்;, சௌராட்டிரம் ஆகிய மொழிகளைத் தமிழ் வரி வடிவத்தில் எழுத முடியும் என்பது ரமணசர்மாவின் வாதம்.
       சிறிரமணசர்மா 2010 சூலை 10ஆம் நாள் 'தமிழ் நீட்சி' முன்மொழிவைத் தந்தார். அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் கடைசி நாள் 25.10.2010. 'தமிழ் நீட்சி' முன்மொழிவையும் அதனால் எழக் கூடிய தீமைகளையும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வக்குமாரும் மற்றச் சிலரும் உலகறியச் செய்தார்கள். அதற்குள் அக்டோபர் திங்கள் பிற்பகுதியாகி விட்டது. பதறியெழுந்த தமிழறிஞர்கள் அவசரமாகத் தங்கள் மறுப்புக் கருத்துகளை ஒருங்குறிச் சேர்த்தியத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஒருங்குறி அறிஞர்களான மலேசியாவைச் சேர்ந்த திரு முத்து நெடுமாறனும், தமிழகத்தைச் சேர்ந்த திரு மணி மு. மணிவண்ணனும் நுணுக்கமான முறையில் ரமணசர்மாவின் முன்மொழிவை நொறுக்கி வி;ட்டார்கள்.
       எப்படியோ ஒரு வழியாக ஒருங்குறிச் சேர்த்தியம் ரமணசர்மாவின் 'தமிழ் நீட்சி'யை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரேயடியாக மறுத்து விட்டதா என்று இனிதான் தெரிய வேண்டும்.
       சிறிரமணசர்மாவின் மற்றொரு முன்மொழிவு 68 கிரந்தக் குறிகளுக்கும் ஒருங்குறியில் தனி ஒதுக்கீடு கேட்பதாகும். இது தமிழுக்குள் கிரந்தத்தையோ கிரந்தத்துக்குள் தமிழையோ நுழைப்பதாக இல்லாத வரை நம் கவலைக்குரியதன்று. இந்த முன்மொழிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
       இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டதற்குக் காரணம் நா. கணேசனின் மற்றுமொரு முன்மொழிவாகும். 68 கிரந்தக் குறிகளோடு சேர்த்;து எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்தையும், எகர உயிர்மெய்க் குறி (n), ஒகர உயிர்மெய்க் குறி (n - h) ஆகிய இரண்டையும் சேர்;த்து ஏழு தமிழ்க் குறிகளைக் கிரந்தத்துக்குள் சேர்த்து, 75 குறிகளைக் கொண்ட தமிழ் - கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்குவதே அந்த முன்மொழிவு. ரமணசர்மா தனது தனிக் கிரந்த ஒதுக்கீட்டை துணைப் பன்மொழித் தளத்தில் கேட்டார் என்றால், இளங்கோவனோ அடிப்படைப் பன்மொழித் தளத்தில் தனது கலவைக் குறியீட்டுக்கு இடம் கேட்டார்.
       கிரந்த சேவையில் ரமணசர்மாவுக்கும் நா. கணேசனுக்கும் நிகழ்ந்த போட்டா போட்டியால் முடிவெடுக்கத் திணறிய ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய அரசின் உதவியை நாடியது. இந்திய அரசு தமிழக அரசையோ தமிழறிஞர்களையோ கலந்து கொள்ளாமலே தனது முன்மொழிவை அனுப்பியது. நா. கணேசன் கேட்ட 75 குறிகளுடன் வேறு சிலவற்றையும் சேர்;த்து மொத்தம் 89 குறிகள் கொண்ட தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு வேண்டும் என்பது தில்லியின் முன்மொழிவு. இந்தக் கலப்படக் குறியீட்டை இந்திய மொழிகள் அனைத்துக்குமான பொது எழுத்து முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது அதன் ஆசைக் கனவு.
       இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க 2010 நவம்பர் மாதம் ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த நிலையில்தான் தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் சீறிக் கிளம்பினர். முனைவர் இராம,கி., பேராசிரியர் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணியைச் சந்தித்து சிக்கலைச் எடுத்துரைக்க, அவர் தமிழக அரசை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தார். தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தி முடிவைத் தள்ளிவைக்கச் செய்துள்ளது. 2011 பிப்ரவரி 7 வரை தமிழ்க் கட்சிக்கு அவகாசம் கிடைத்துள்ளது. தமிழக அரசு ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. வேறு எதற்கும் இல்லா விட்டாலும் சிக்கலைக் கிடப்பிலிட விசாரணைக்குழு பயன்படும் என்பது பட்டறிவு.
       இம்முறை தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்களும், தமிழ் அமைப்புகளும் விழித்துக் கொண்டு விறுவிறுப்பாகச் செயல்படுவது நல்ல செய்தி. தாளாண்மை உழவர் இயக்கம் 2011 சனவரி 9ஆம் நாள் தஞ்சையில் கருத்தரங்கமும் பொதுக்கூட்டமும் நடத்தித் தமிழ் எழுத்துச் சிதைப்புக்கு எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியுள்ளது. 'ஒருங்குறித் தமிழ் - மெய்யும் மீட்பும்' என்ற அறிவ+ட்டும் கட்டுரைத் தொகுப்பையும் அது வெளியிட்டுள்ளது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
       ஊடகங்களில் மக்கள் தொலைக்காட்சி சங்கப் பலகையில் ஒருங்குறி தொடர்பாக இலக்குவனார் திருவள்ளுவன், நாக. இளங்கோவன், இராம. கி. ஆகியோருடன் உரையாடல்கள் இடம்பெற்றன. நீதிமன்றத்தை அணுகும் திட்டமும் உள்ளது. பல்வேறு முனைகளிலும் தமிழ் காக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
       ஆனால் விடைகாண வேண்டிய உயிர்க் கேள்வி ஒன்று உள்ளது: தமிழுக்கு இப்படித் திடுமென ஆபத்துகள் கிளம்புவது ஏன்? ஏழுகோடித் தமிழ் மக்கள் பேசும் மொழியின் எழுத்துமுறையில் கிரந்தக் கலப்படம் செய்ய யாரோ ஒரு சர்மாவும் யாரோ ஒரு கணேசனும் முன்மொழிவதும், அதை மறுத்துத் தமிழ் அறிஞர்கள் மெனக்கெட்டு வாதிட்டுக் கொண்டிருப்பதும், அரசே இதற்கு ஒரு குழு அமைப்பதும்… இது என்ன கூத்து? ஒருங்குறியில் தமிழ் எழுத்துமுறைக்கு யார் பொறுப்பு? ஒருங்குறிச் சேர்த்தியம் என்ற பன்னாட்டு அமைப்பு தமிழ் எழுத்துமுறையில் சேர்;க்கைகள் செய்ய முன்மொழிவுகள் வந்தால் அதைத் தமிழக அரசுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும் செம்மொழி ஆய்வு மையத்திற்கும் தெரிவித்துக் கருத்துக் கேட்க வேண்டாமா? இந்திய அரசும் சேர்த்தியத்தின் முன்மொழிவுக்கு விடை தருமுன் தமிழக அரசைக் கேட்கத் தேவையி;ல்லையா? தமிழின் ஒலி, வரி வடிவங்களைக் காக்கவும், மாற்றம் செய்ய வேண்டுமென்றால் உரியவாறு அதைச் செய்யவும் தமிழ்ப் புலவர் குழு, தமிழ்ப் பேரவை போன்ற நிலையான அமைப்புகள் தேவையில்லையா?
       உலகில் தமிழனைப் போலவே அவன் பேசும் மொழியும் நாதியற்றுப் போய் விட்டதே! தமிழ்க் காப்பு, தமிழ் மீட்பு என்பது மொழித் தளத்தில் மட்டும் நிறைவேறக் கூடியதன்று. தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்தை வெல்வதோடு, வருமுன் காக்கும் சிந்தனையும் நமக்குத் தேவை.

காலிங்கராயன் கால்வாய் - ஒரு பருந்துப்பார்வை


ஈரோடு மாவட்டத்தில், காலிங்கராயன் கால்வாய் அம்மாவட்டத்தின் அணிகலனாகத் திகழ்கிறது என்பது மிகையல்ல. பவானி ஆற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, காவிரியாற்றின் ஓரமாகவே, அதன் தென்கரையில் சுமார் 86.8 கிலோ மீட்டர் (55.5 மைல்கள்) கிழக்காக ஓடி ஆவுடையார் பாறை என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் சங்கமமாகிறது. கால்வாயின் இரு கரைகளும், காரையால் கட்டப்பட்டு இருப்பதால், “காரைவாய்க்கால்’’ என்றும் பாம்புபோல் நெளிந்து நெளிந்து செல்வதால் “கோண வாய்க்கால்’’ என்றும் ஈரோடு மக்கள் அழைக்கின்றனர். இக்கால்வாயை காலிங்கராயன் என்பவர் வேளாண் தொழில் நுட்பத்துடன் உருவாக்கியதால், காலிங்கராயன் கால்வாய் என்று பெயர் பெறுகிறது. காலிங்கராயன் குறித்த கல்வெட்டுகளும், அணைகட்டிய செய்திகள் தாங்கிய பட்டயங்களும். செப்பேடுகளும், கைபீதுகளும் (வம்சாவளித்திரட்டு) பிரபல கல்வெட்டு அறிஞர் திரு. புலவர். செ. இராசு அவர்களால் தொகுக்கப் பட்டுள்ளது. இது மிக அரிய முயற்சியாகும். காலிங்கராயன் கால்வாய் குறித்த புதிய பார்வை என்பது அவசியமாகிறது. இதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொதுவாக முற்காலங்களில் எழுதப்பட்டுள்ள பட்டயங்களிலும், செப்பேடுகளிலும், கைபீதுகளிலும் புனைவுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் சிலசமயங்களில் உண்மையை புனைவுகள் மூடி இருப்பதைக் காணமுடியும். எனவே, கல்வெட்டுகளில் உள்ள புனைவுகளை நீக்கி உண்மையை கண்டறிய முடியும்.
1. திங்களூர் அழகப் பெருமாள் கோவில் கல்வெட்டு வைணவர்களுக்கும், நம்பிமார்களுக்கும், உணவளிக்க தரிசு நீக்கி, குளங்கள் வெட்டி சில வரிகளை உருவாக்க, காலிங்கராயன் உத்தரவு.
2. விசயமங்கலம் நாகேஸ்வரசாமி கோயில் கல்வெட்டு, வாகைப்புதூரில் பாழ்பட்டு கிடந்த நிலத்தைச் சீர்படுத்தி, வாரத்திற்கு விட்டு வருமானத்தை கோயிலுக்கு வழங்கிய காலிங்கராயன் உத்தரவு.
3. நெரூர் அக்கீசுவரர் கோயில் கல்வெட்டு, பாழ்பட்டு கிடந்த புறம்போக்கு நிலம் மற்றும் நன்செய், தோட்டம் முதலிய உருவாக்கி, குளம்வெட்டி, கச்சிராய நல்லூர் என்ற ஊரை ஏற்படுத்தியது குறித்து உத்தரவு.
4. எலத்தூர் சோழீச்சுவரர் கோவில் கல்வெட்டு, குளத்தை திருத்தி, பயிர்செய்து நிலத்திற்கான வரியை கோயிலுக்கு செலுத்த காலிங்கராயன் உத்தரவு.
5. சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டும் குளத்தை செப்பனிட்டு நிலம் திருத்தி, வரிகளை மேற்படி கோயிலுக்கு வழங்க உத்தரவு.
6. குன்னத்தூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கல்வெட்டு காட்டை அழித்து, சாகுபடி நிலங்களை உருவாக்கி, குடியேற்றம் செய்த உத்தரவு.
7. கொடுமுடி அம்மன் சந்நிதி கல்வெட்டு, திருச்சிற்றம்பல நல்லூர் நாயனாருக்கு நில வருமானம் சேர உத்தரவு.
8. வெஞ்சமாங் கூடலூர் கல்வெட்டு, கண்ணப்ப நல்லூருக்கு நஞ்சை நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட செய்திகள், காலிங்கராயன் கால்வாய் மட்டும் வெட்டவில்லை, மாறாக குளம் செப்பனிடல், தரிசு புறம்போக்கு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவந்து, அவற்றை கோயில்களுக்கும், புரோகிதர்களும், வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். நல்லூர் என்பது பிராமணர்கள் குடியிருக்கும் பிரமதேய ஊர்களாகும். காலிங்கராயன் அரசு அதிகாரி மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தில், வேளாளர் பாசனத்தை வசதியை மேம்படுத்தியவரும் ஆவார்.
காலிங்கராயன் கால்வாய் வெட்டி, அணைகட்டிய ஆண்டு கி.பி. 1282 என திரு. புலவர் இராசு அவர்கள் வரையறை செய்துள்ளது சரியே. இதை வரலாற்றுக் குறிப்பு எழுதிய புக்கானன் (1800ல்) உறுதி செய்துள்ளார். கல்வெட்டு குறிப்புகளில் இருந்து, அந்நாளில் கோவில்களுக்கு தேவதானம் என்ற முறையில் நிலமும் பாசன வசதியும் செய்து தருவதும், பார்ப்பனர்களுக்கு, ஊரும் நிலமும் அளிப்பதை பிரமதேயம், சதுர்வேதிமங்கலம், நல்லூர் என்ற பெயர்கள் சுட்டும் இது தவிர அரசுபடை அதிகாரிகளுக்கு மூவேந்தர் வேளாண் என்ற பெயரில் நிலங்களையும், கிராமங்களையும் கொடுப்பது சோழ, பாண்டிய அரசுகளின் வழக்கத்தில் இருந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது சங்க காலத்திலேயே பார்ப்பனர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நிலத்துடன் கூடிய ஊர்களை வழங்கும் பழக்கம் துவங்கிவிட்டது. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் இவை உச்சத்திற்கு சென்றது. கொங்கு மண்டலத்தில் இது 12, 13ஆம் நூற்றாண்டில்தான் செயல்பட்டது. இவ்வகை நிலமானிய முறையானது சோழப்பேரரசு நிலை கொள்ளவும், தமிழகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆளவும் பயனளித்தது. 12ஆம் நூற்றாண்டு வரை கொங்குநாடு சேர, சோழ பாண்டிய நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததே ஒழிய இனக்குழுக்களை அழித்து புதிய உற்பத்திமுறை தோற்றுவிக்கப்படவில்லை. முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மருத நிலப்பகுதிகளில் இனக்குழு சிதைவடைந்த நிலையில், கொங்கில் மட்டும் சிதையாமல் 12ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது. அது மட்டுமல்ல புறம்போக்கு நிலங்கள் ஏராளமாகவும் இருந்தன.
13ஆம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது. பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.
கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. குடியேறிய வேளாளர்கள் கொங்கிலுள்ள ஆயர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டு வேளாளர் என்ற புதியப் பெயரைத் தாங்கி நின்றனர். இவர்கள் குடியேறிய பின்பே, நீர்பாசனமுறை கொங்கு நாட்டில் உருவானது. குடியேறிய வேளாளர்கள் ஏற்கெனவே ஆயர்களிடம் உள்ள கூட்டம் (குலம்) முறையை ஏற்றுக்கொண்டனர். ஆயர்கள் அவர்களிடம் வேளாண் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். இதன் பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு. “கள்ளர், மறவர், கனத்த அகம்படியார் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆயினர்’’, என்ற பழமொழிபோல் கொங்கு ஆயர்களே, குடியேறிய வேளாளர்களுடன் கலப்பு கொண்டு “கொங்கு வேளாளர்’’ ஆயினர் என வரலாற்று ஆசிரியர்கள் (ஸ்டைன், பேக்கர், தர்ஷன், மார்டன், நிக்கச்லன்) தங்களது ஆய்வில் தெரிவிக்கின்றனர்.
சோழப்பேரரசு, தனது தேவைக்காக, சிறந்த உபரியான நெல் சாகுபடிக்கு ஏற்றவாறு கொங்குநாட்டு நிலங்களை கிணறு, குளம், ஆறு இவைகளின் மூலம் பாசன வசதி செய்து, அவற்றை கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும், அரசு அதிகாரிகளும் அளித்தனர் என்பதே கொங்கு நாட்டின் 13வது நூற்றாண்டு வரலாறு இவை குறித்த கல்வெட்டுகள் 12, 13ஆம் நூற்றாண்டில் ஏராளமாக பொறிக்கப்பட்டுள்ளது என கல்வெட்டில் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே காலிங்கராயன் வாய்க்கால் உருப்பெற்றுள்ளது. அமராவதி நதியின் ஓரத்தில் உள்ள ஊர்களான கொழுமம், கொமரலிங்கம், ருத்ரபாளையம், தாராபுரம், கரூர் வரையில் இந்தப்பாசனம் உண்டு. இந்த ஊர்களில் பார்ப்பனர்களின் குடியிருப்பும் அதிகம். அதேபோல் காலிங்கராயன் கால்வாய் கரூரை நெருங்கி இருக்கும் ஊர்களான, கொடுமுடி, வெங்கம்பூர், ஊஞ்சலூர், கொளாநல்லிள ஆகிய இடங்களையே அதிகமாக வளப்படுத்துகிறது. போகிற வழியில்கூட பிராமண பெரிய அக்ரஹாரம் என்ற குடியிருப்பு தோற்று விக்கப்பட்டுள்ளது.
கரூர், சேது பேரரசின் முக்கியமான கேந்திரமான நகரம். கரூருக்கும், வஞ்சித்துறை முகத்திற்கும் பெருவழிப்பாதை இருந்துள்ளது. எனவே, கரூரை மையப்படுத்தியே, காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டு, நீர்ப்பாசன வசதி செய்யப் பட்டுள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன் தேவை இதுவாகத்தான் இருந்துள்ளது. இன்றுள்ள பாசூர், சாவடிப்பாளையம், மலையம்பாளையம் போன்ற ஊர்கள் அன்று என்னவாக இருந்தது என்பது ஆய்வுக்குரியது. கோவில்களுக்கும், பிராமணர்களுக்கும், அதிகாரிகளின் நலனுக்கும், உருவாக்கப்பட்டதே காலிங்கராயன் வாய்க்கால். 800 ஆண்டுகளுக்கு முன்பு, கொங்கு நாடு அடர்ந்த மரங்களுடன் கூடிய காடாக இருந்ததால், கால்வாய், காவிரி நதிக்கரையை ஒட்டியே மேட்டுப்பாங்கான நிலத்தில் வளைந்து செல்வதை அறிய முடிகிறது. அரசை வலுப்படுத்தும் பொருளாதார விஸ்தரிப்பே, காலிங்கராயன் கால்வாய் உருவாக்கம் என்பது தெளிவானது.
காலிங்கராயன் என்ற பெயர் அவர் வெட்டிய கால்வாய் மூலம் அறியப்படுகிறது. கல்வெட்டுகளில் அவர் உருவாக்கிய சாசனங்கள் மூலம் அவர் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அதிகாரி எனத்தெரிகிறது. காலிங்கராயன் என்பது அவருக்குக் கிடைத்த பட்டம் என திரு. புலவர் செ. இராசு அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். “பாண்டியர் ஆட்சி கொங்கு நாட்டில் பரவியிருந்தது என்பதாலும், காலிங்கராயன் என்ற பட்டம் அளிக்கும் வழக்கம் கி.பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து உள்ளது என்பதாலும் காலிங்கராயன் என்ற பெயரே அரசன் அளித்த பட்டப் பெயராக நம் தலைவனுக்கு உள்ளமை விளக்கும்’’ (புலவர் செ. இராசு 2007:24) இது உண்மையாகும். அன்றைய வேளாண் தொழிலே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. சோழப் பேரரசில் வேளாண் தொழிலில் பல விதமான வேலைப்பிரிவினைகள் இருந்துள்ளது. அதில் ஒன்று பாசன வசதியை உருவாக்குதல் ஆகும். ஆற்றலும், திறமையும் கொண்ட, அதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளுக்கு காலிங்கராயன் என்ற பட்டத்தை வழங்குவது சோழப்பேரரசின் வழக்கத்தில் இருந்துள்ளது. மேலும் “அணைக்கட்டுவதற்கு முன்னரே காலிங்கராயன் என்ற பெயர் நம் தலைவனுக்கு வழங்கியது என்பதையும்’’ புலவர் செ. இராசு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, காலிங்கராயன் என்பது இயற்பெயரல்ல, அரசால் அளித்த பட்டம் என்பதும், அப்பட்டம் காலிங்கராயன் அணைகட்டுவதற்கு முன்னரே பெற்றிருந்தார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. கால்வாய் வெட்டுவதற்கு முன்பே, காலிங்கராயன் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரு அதிகாரி, தனது ஆற்றலையும், திறமையையும் அங்கு உபயோகப்படுத்தி, அரசிடம் இப்பட்டத்தைப் பெற்றார் என்ற கேள்வி எழுகிறது.
வேளாண்துறைக்கென பல்கலைக்கழகம் இல்லாத காலத்தில், படித்துப் பட்டம் பெற்றிருக்க முடியாது. சூத்திரர்கள் கல்விக் கற்கக்கூடாது என வர்ணதர்மம் நீடித்துள்ள சமூகத்தில், கல்வியால் பெற்றிருக்க இயலாது. தனது திறமையை மருதநிலப் பகுதிகளான தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் நீர்ப்பாசன கட்டமைப்பில் தனது ஆற்றலை செயல்படுத்தி, இப்பட்டத்தை பெற்றிருக்க வேண்டும். முல்லை நிலத்தில் பிறந்து வளர்ந்த யாரும் அக்காலத்தில் இத்திறமையை பெற்றிருக்க வழியில்லை. எனவே, இவரது பிறப்பு என்பது மருத நிலப்பகுதி எனக் கொள்ள இடமுண்டு. வேளாளர்களை புலப்பெயர்வு செய்ய வைத்து, தானும் இங்கு புலம் பெயர்ந்து வந்திருக்க வேண்டும். அரசின் ஆணைக்கு ஏற்பவே இது நடந்திருக்க வேண்டும். இவருக்கான பணி என்பது காடுகள் அடர்ந்த கொங்குப்பகுதியில், ஏற்கெனவே சிறிய அளவில் வேளாண் (நீர்ப்பாசன வசதியற்ற நிலையில்) பயிர் தொழில் செய்த ஆயர்களின் உதவியுடன் கிணறு, குளம் மற்றும் ஆறு இவைகளின் பாசன வசதியை ஏற்படுத்துவதே ஆகும்.
கொங்கு நாட்டில் முதன்முறையாக நீரை அடக்கி பாசனம் என்ற புதிய வேளாண் உத்தியை உருவாக்கியதால் மக்கள் மனதிலும், கல்வெட்டுகளிலும் இடம் பெற்றிருக்கிறார். ஒரு புதிய வேளாண் புரட்சியை தோற்றுவித்தவர். அதன் பயன் முழுவதும் முதன்முதலாக வேளாளர் என்ற ஆயர்களுக்கு பயனளித்ததாலும், அவர்கள் காலிங்கராயனை சுவீகரித்துக் கொண்டனர். பின் நாளில் வேட்டுவர்களும், வேளாண் தொழிலை சுவீகரித்துக் கொண்டதால் “வேட்டு வேளாளர்’’ என்று தங்களை அழைத்துக் கொண்டனர். மருத நிலப்பகுதியில் இருந்த வேளாளர்கள் தமது சாதிப்பெயரை பிள்ளை என மாற்றிக்கொண்டது போல் கொங்கு வேளாளர்கள் தங்கள் பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். வேட்டுவர்களும் பின்பு தங்களை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். இது தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்கான நடவடிக்கையாகும். பொதுவாக ஒவ்வொரு சாதியும் தங்களை மேல் நிலையாக்கம் செய்யும் பொருட்டு, புராண இதிகாசங்களுடன் தொடர்புப்படுத்திக் கூறும் மரபு நமது நாட்டில் உண்டு. கைக்கோளர்கள், தங்களை முருகக்கடவுளின் தளபதியான “வீரபாகுவின் வழித்தோன்றல்’’ எனக் கூறிவருகின்றனர். காளகஸ்திப் பகுதியில் வாழ்ந்த வேட்டுவக் குடியினரான கண்ணப்பநாயனரோடு, கொங்கு நாட்டு வேட்டுவ மக்களும் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டதாக (செ. இராசு 1991.153) அறிகிறோம். அதுபோலவே கொங்கு நாட்டில் நீர்ப்பாசனப் புரட்சி செய்த ஆற்றல்மிகு, காலிங்கராயன் என்ற பட்டத்திற்கு உரியவரை (இயற்பெயர் அறிய முடியவில்லை) தமது சாதிக்குரியவர் எனப்பதிவு செய்வதின் மூலம் தமது சாதியை மேல்நிலையாக்கம் செய்ய முயல்கின்றனர். வேளாளக் கவுண்டருக்குள்ளும் அவரை ஒரு கூட்டத்திற்கு மட்டுமே உரியவராக பதிவு செய்து அக்கூட்டம் தம்மை மேல்நிலைப்படுத்திக் கொள்ள தொடர்முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தமிழகத்து மக்களின் நடைமுறை சார்ந்த மரபேயாகும்.

காங்.,கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது:கொமுக......

ஆத்தூர் : ஆத்தூரில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  ஆலோசனைக் கூட்டம், அதன் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன் கூறியதாவது : தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 60 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது; 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் திமுக வின் ‌வெற்றியை எவ்விதத்திலும் பாதிக்காது; திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளது; தமிழகத்தில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் எந்தெந்த தொகுதிகளில் ‌ போட்டியிடும் என்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நாளை தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி  தினமலர்  .

Saturday, March 5, 2011

*ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி எழுதிய மடல்*


*"2G ஸ்பெக்ட்ரம்"*
ஒரு இந்தியன் மூலம் செய்யபட்ட முறைகேடு, ஊழல் ஒவ்வொரு இந்தியனையும் வெகுவாக
பாதித்துள்ளது. அதில் தலித், முதலியார், பிராமிணர், வன்னியர், முஸ்லிம்,
கிறித்துவன் என்று பாகுபாடு இல்லை. ஊழல் செய்தவருக்கே தான் செய்யபோகும் இந்த
ஊழல் தன்னை சார்ந்த ஜாதி மக்களையும் சேர்த்துதான் பாதிக்கும் என்பதை தெள்ள
தெளிவாக தெரிந்துகொண்டுதான் இந்த ஊழலை சுயநலத்துடன் செய்துள்ளார். அப்படி
இருக்கையில் எங்கிருந்து தனியாக வந்தது "தலித்" என்னும் மந்திர சொல்.
மன்னிக்கவும் தந்திர சொல். அனைத்து தகுதிகளுடனும், போதிய அனுபவமும் உள்ள S.Tel
நிறுவனம் சுமார் 13,000 கோடிக்கு வங்கி காசோலை கொடுத்து 2G உரிமத்தை வாங்க
முன்வந்தது. கிடைக்காமல் பிரதமர் அலுவலகத்துக்கே நியாயம்
கேட்டு கடிதம் எழுதி உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து நியாயமோ அல்லது
பதில் கடிதமோ வரவில்லை. இதனால்தான் அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி
நியாயம் கேட்டுள்ளது. அதன் பின்னர் தான் பத்திரிகைகள், எதிர்கட்சிகள், பொதுநல
அமைப்புகள், CAG ,PAC போன்றவை முழித்தனர் . பல தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு
விதிகளுக்கு முரணாக உரிமங்கள் வழங்கபட்டுள்ளது.

அதுவும் வெறும் 1200, 1300,1650 கோடிகளுக்கு வழங்கபட்டுள்ளது. உண்மை இவ்வாறு
இருக்க சில அரசியல் தேசதுரோகிகள் 2G - யில் ஊழல் செய்யப்படவில்லை கைபேசியில்
பேசுவதற்கு உண்டான கட்டணம் குறைக்கபட்டு புரட்சி செய்யபட்டுள்ளது என்று பொய்களை
மக்களிடம் பரப்புவது தெரிந்தே தவறு செய்வதில் நல்ல புலமை அடைந்தவர்கள் என்பது
நிரூபணம் ஆகிறது. மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ எள்ளளவும் கவலை படாதவர்கள்
என்பது நன்கு புலப்படுகிறது. இந்த கட்டணம் குறைந்தது சந்தையில் நிறுவனங்களுக்கு
இடையேயான போட்டியின் காரணம் என்பது படித்த அறிவார்ந்த மக்களுக்கு நன்றாக
தெரியும். அதை போதிய
விளக்கங்களுடன் விவரிக்க விரும்புகிறேன்.

இதை 1999 ஆண்டில் இருந்து ஆரம்பம் செய்வது நல்லது. இந்த ஆண்டில் தான்
தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள்
மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு.
பலலட்சங்கள், சில கோடிகள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைவரிசை
மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது.
ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து
உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு ரூபாய் 1.40
கட்டணம் வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்
என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி
நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள்
விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக
நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு
புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை
அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை
சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான
மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர்.
ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத
நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது.

தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட்
அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க
வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்.
டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு
அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

*நியாய கணக்கு:*
*இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல்
உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை
ஒரு நாளைக்கு வெறும் ஐந்து நிமிடங்கள் பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்.
ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
அப்போ 5x0.40 =2.௦ ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது.
60 கோடி கைபேசிகள். 60x2 = 120 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது.
ஒரு மாதத்திற்கு 30x120 = 3600 கோடிகள்.
ஒரு வருடத்திற்கு 365x3600 = 13,14,000 கோடிகள்.
2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ
குறைந்தபட்ச
வருமானம் இன்றுவரை 26,28,000 கோடிகள். இதுதான் கணக்கு. இது ஒரு நாளைக்கு வெறும்
ஐந்து நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு
கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, ISD மற்றும் ஐந்து நிமிடத்திற்கு
அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக
கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே
முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது
"INFINITIVE". இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது
மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா?
நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த
மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல்
பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது.
விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர
மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும்
மாறுவார்கள்.
*
*துரோகம்-1: *
உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம்
பொறுமானம் உள்ள
(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள்
உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு
விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய,
மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

*துரோகம்-2: *
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு
நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது
பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை
சென்று அடைந்துள்ளது.

*துரோகம்-3: *
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள்
இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும்
அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர
ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல்
தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில்
மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட்
நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால்
சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட
மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு
"S.TEL<http://s.tel/>போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை
என்ற சந்தேகம் தெளிவாக
எழுகிறது.

*துரோகம்-4: *
MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய
ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு
வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து
இருப்பார்கள்.

*துரோகம்-5: *
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி
நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும்
அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
அச்சுறுத்தல்.

*துரோகம்-6: *
நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட
ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை
கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில்
ஆதாரங்கள், சாட்சிகள் சுளையாக இருந்தும் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை
எடுக்காதது மக்களுக்கு இழைக்கபட்ட ஆறாவது துரோகம். முதலில் வருபவருக்கே
முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட
பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

*துரோகம்-7: *
இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு
கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது
மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும்
இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த
உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள்
என்ற ஆணவ நினைப்பு.

*துரோகம்-8: *
நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு
தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது
மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

*துரோகம்-9:*
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில்
புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக
தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு
கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று
உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி
ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை
கண்டிருக்கலாம்.

*துரோகம்-10: *
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை
விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக
தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே
மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு
செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு
இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி.
நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை
அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

*இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த
ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி?
ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை
பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை
குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய
சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின்
விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று.

இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு
ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான்
செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல.
அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு.
உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து
பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும்
பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும்
ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம்
ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள்.
சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை
தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின்
செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள்
கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும்
உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும்
மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது.
இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகுகிறது. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் அதை விட
அதிகமாகிறது. ஊழலை ஒழிக்காமல் 5 %, 6 % வளர்ச்சி என்று அரசு கூறுவது ஒரு
வகையிலும் இந்தியாவை வல்லரசாக்காது. இந்த எண்ணிக்கையிலும் எவ்வளவு உண்மை
உள்ளதோ! இறைவனுக்கே வெளிச்சம்.
*
எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள்
உள்பட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள்,
புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். நன்றி.



நன்றி  கணியப்பன் ...

கொங்கு பாடல்


தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முறிந்தது....


சென்னை : மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் இருந்து மத்திய அரசிற்கு ஆதரவளிப்பது என்றும் தி.மு.க., உயர்மட்ட செயல்திட்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, ஒருங்கிணைப்பு குழு போன்ற நிபந்தனைகள் விதித்தது. இதனால் 3 முறை நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை தர முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 63 இடங்களும், வேண்டிய தொகுதிகளும் தர வேண்டும் என கோரியது. இதற்கு தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பியது.



இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம் : சட்டசபை தேர்தலுக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் தி.முக., ஈடுபட்டது.சோனியாவை நான் டில்லியில் சந்தித்த பின், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என, அறிவித்தேன். காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது, 2006ம் ஆண்டு தேர்தலில், போட்டியிட்ட விவரங்கள் தி.மு.க., சார்பில் எடுத்துக் கூறப்பட்டது.

தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., மீண்டும் உறவு கொண்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் போட்டியிட்ட இடங்களைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மார்க்சிஸ்ட் கமயூ., இந்திய கம்யூ., போட்டியிட்ட 23 இடங்களை புதிதாக சேர்த்துள்ள விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை தி.மு.க., - காங்கிரஸ் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப்பட்டது.

அவ்வாறு கணக்கிட்ட போது, காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. அந்த இடங்களை அதிகமாக்க வேண்டும் என்ற காரணத்தால், 51 இடங்கள் 53 என்றாகி பின், 55 என்றாகி, 58 என்றாகி கடைசியாக 60 இடங்கள் என்று குலாம் நபி ஆசாத் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதை மேலிடத்தில் தெரிவித்து விட்டு உறுதி செய்வதாகக் கூறினார். ஆனால், அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, இன்று (நேற்று) இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 63 சீட்கள் ஒதுக்க வேண்டும் என்றும், கேட்கும் தொகுதிகள் அனைத்தையும் தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

காங்கிரசிற்கு 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அவர்கள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என கேட்பதும் முறைதானா என்பதை, அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து இன்று மாலையில் நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழுவில் உரிய முடிவு எடுக்கப்படும். என கூறியிருந்தார்.

கொங்கு கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை

மார்ச் 5 :கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்-தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.

கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்-கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்-சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணி--யூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.


கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.
இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்-தலை-வர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்-காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்-கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்-பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும்.