Monday, March 7, 2011

காங்.,கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது:கொமுக......

ஆத்தூர் : ஆத்தூரில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  ஆலோசனைக் கூட்டம், அதன் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன் கூறியதாவது : தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 60 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது; 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் திமுக வின் ‌வெற்றியை எவ்விதத்திலும் பாதிக்காது; திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளது; தமிழகத்தில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் எந்தெந்த தொகுதிகளில் ‌ போட்டியிடும் என்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நாளை தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி  தினமலர்  .

Saturday, March 5, 2011

*ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி எழுதிய மடல்*


*"2G ஸ்பெக்ட்ரம்"*
ஒரு இந்தியன் மூலம் செய்யபட்ட முறைகேடு, ஊழல் ஒவ்வொரு இந்தியனையும் வெகுவாக
பாதித்துள்ளது. அதில் தலித், முதலியார், பிராமிணர், வன்னியர், முஸ்லிம்,
கிறித்துவன் என்று பாகுபாடு இல்லை. ஊழல் செய்தவருக்கே தான் செய்யபோகும் இந்த
ஊழல் தன்னை சார்ந்த ஜாதி மக்களையும் சேர்த்துதான் பாதிக்கும் என்பதை தெள்ள
தெளிவாக தெரிந்துகொண்டுதான் இந்த ஊழலை சுயநலத்துடன் செய்துள்ளார். அப்படி
இருக்கையில் எங்கிருந்து தனியாக வந்தது "தலித்" என்னும் மந்திர சொல்.
மன்னிக்கவும் தந்திர சொல். அனைத்து தகுதிகளுடனும், போதிய அனுபவமும் உள்ள S.Tel
நிறுவனம் சுமார் 13,000 கோடிக்கு வங்கி காசோலை கொடுத்து 2G உரிமத்தை வாங்க
முன்வந்தது. கிடைக்காமல் பிரதமர் அலுவலகத்துக்கே நியாயம்
கேட்டு கடிதம் எழுதி உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து நியாயமோ அல்லது
பதில் கடிதமோ வரவில்லை. இதனால்தான் அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி
நியாயம் கேட்டுள்ளது. அதன் பின்னர் தான் பத்திரிகைகள், எதிர்கட்சிகள், பொதுநல
அமைப்புகள், CAG ,PAC போன்றவை முழித்தனர் . பல தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு
விதிகளுக்கு முரணாக உரிமங்கள் வழங்கபட்டுள்ளது.

அதுவும் வெறும் 1200, 1300,1650 கோடிகளுக்கு வழங்கபட்டுள்ளது. உண்மை இவ்வாறு
இருக்க சில அரசியல் தேசதுரோகிகள் 2G - யில் ஊழல் செய்யப்படவில்லை கைபேசியில்
பேசுவதற்கு உண்டான கட்டணம் குறைக்கபட்டு புரட்சி செய்யபட்டுள்ளது என்று பொய்களை
மக்களிடம் பரப்புவது தெரிந்தே தவறு செய்வதில் நல்ல புலமை அடைந்தவர்கள் என்பது
நிரூபணம் ஆகிறது. மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ எள்ளளவும் கவலை படாதவர்கள்
என்பது நன்கு புலப்படுகிறது. இந்த கட்டணம் குறைந்தது சந்தையில் நிறுவனங்களுக்கு
இடையேயான போட்டியின் காரணம் என்பது படித்த அறிவார்ந்த மக்களுக்கு நன்றாக
தெரியும். அதை போதிய
விளக்கங்களுடன் விவரிக்க விரும்புகிறேன்.

இதை 1999 ஆண்டில் இருந்து ஆரம்பம் செய்வது நல்லது. இந்த ஆண்டில் தான்
தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள்
மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு.
பலலட்சங்கள், சில கோடிகள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைவரிசை
மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது.
ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து
உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு ரூபாய் 1.40
கட்டணம் வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்
என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி
நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள்
விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக
நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு
புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை
அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை
சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான
மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர்.
ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத
நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது.

தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட்
அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க
வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்.
டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு
அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

*நியாய கணக்கு:*
*இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல்
உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை
ஒரு நாளைக்கு வெறும் ஐந்து நிமிடங்கள் பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்.
ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
அப்போ 5x0.40 =2.௦ ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது.
60 கோடி கைபேசிகள். 60x2 = 120 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது.
ஒரு மாதத்திற்கு 30x120 = 3600 கோடிகள்.
ஒரு வருடத்திற்கு 365x3600 = 13,14,000 கோடிகள்.
2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ
குறைந்தபட்ச
வருமானம் இன்றுவரை 26,28,000 கோடிகள். இதுதான் கணக்கு. இது ஒரு நாளைக்கு வெறும்
ஐந்து நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு
கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, ISD மற்றும் ஐந்து நிமிடத்திற்கு
அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக
கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே
முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது
"INFINITIVE". இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது
மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா?
நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த
மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல்
பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது.
விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர
மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும்
மாறுவார்கள்.
*
*துரோகம்-1: *
உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம்
பொறுமானம் உள்ள
(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள்
உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு
விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய,
மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

*துரோகம்-2: *
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு
நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது
பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை
சென்று அடைந்துள்ளது.

*துரோகம்-3: *
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள்
இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும்
அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர
ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல்
தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில்
மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட்
நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால்
சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட
மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு
"S.TEL<http://s.tel/>போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை
என்ற சந்தேகம் தெளிவாக
எழுகிறது.

*துரோகம்-4: *
MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய
ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு
வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து
இருப்பார்கள்.

*துரோகம்-5: *
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி
நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும்
அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
அச்சுறுத்தல்.

*துரோகம்-6: *
நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட
ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை
கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில்
ஆதாரங்கள், சாட்சிகள் சுளையாக இருந்தும் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை
எடுக்காதது மக்களுக்கு இழைக்கபட்ட ஆறாவது துரோகம். முதலில் வருபவருக்கே
முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட
பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

*துரோகம்-7: *
இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு
கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது
மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும்
இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த
உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள்
என்ற ஆணவ நினைப்பு.

*துரோகம்-8: *
நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு
தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது
மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

*துரோகம்-9:*
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில்
புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக
தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு
கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று
உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி
ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை
கண்டிருக்கலாம்.

*துரோகம்-10: *
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை
விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக
தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே
மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு
செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு
இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி.
நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை
அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

*இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த
ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி?
ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை
பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை
குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய
சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின்
விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று.

இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு
ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான்
செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல.
அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு.
உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து
பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும்
பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும்
ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம்
ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள்.
சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை
தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின்
செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள்
கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும்
உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும்
மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது.
இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகுகிறது. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் அதை விட
அதிகமாகிறது. ஊழலை ஒழிக்காமல் 5 %, 6 % வளர்ச்சி என்று அரசு கூறுவது ஒரு
வகையிலும் இந்தியாவை வல்லரசாக்காது. இந்த எண்ணிக்கையிலும் எவ்வளவு உண்மை
உள்ளதோ! இறைவனுக்கே வெளிச்சம்.
*
எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள்
உள்பட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள்,
புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். நன்றி.



நன்றி  கணியப்பன் ...

கொங்கு பாடல்


தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முறிந்தது....


சென்னை : மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் இருந்து மத்திய அரசிற்கு ஆதரவளிப்பது என்றும் தி.மு.க., உயர்மட்ட செயல்திட்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, ஒருங்கிணைப்பு குழு போன்ற நிபந்தனைகள் விதித்தது. இதனால் 3 முறை நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை தர முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 63 இடங்களும், வேண்டிய தொகுதிகளும் தர வேண்டும் என கோரியது. இதற்கு தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பியது.



இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம் : சட்டசபை தேர்தலுக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் தி.முக., ஈடுபட்டது.சோனியாவை நான் டில்லியில் சந்தித்த பின், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என, அறிவித்தேன். காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது, 2006ம் ஆண்டு தேர்தலில், போட்டியிட்ட விவரங்கள் தி.மு.க., சார்பில் எடுத்துக் கூறப்பட்டது.

தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., மீண்டும் உறவு கொண்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் போட்டியிட்ட இடங்களைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மார்க்சிஸ்ட் கமயூ., இந்திய கம்யூ., போட்டியிட்ட 23 இடங்களை புதிதாக சேர்த்துள்ள விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை தி.மு.க., - காங்கிரஸ் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப்பட்டது.

அவ்வாறு கணக்கிட்ட போது, காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. அந்த இடங்களை அதிகமாக்க வேண்டும் என்ற காரணத்தால், 51 இடங்கள் 53 என்றாகி பின், 55 என்றாகி, 58 என்றாகி கடைசியாக 60 இடங்கள் என்று குலாம் நபி ஆசாத் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதை மேலிடத்தில் தெரிவித்து விட்டு உறுதி செய்வதாகக் கூறினார். ஆனால், அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, இன்று (நேற்று) இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 63 சீட்கள் ஒதுக்க வேண்டும் என்றும், கேட்கும் தொகுதிகள் அனைத்தையும் தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

காங்கிரசிற்கு 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அவர்கள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என கேட்பதும் முறைதானா என்பதை, அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து இன்று மாலையில் நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழுவில் உரிய முடிவு எடுக்கப்படும். என கூறியிருந்தார்.

கொங்கு கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை

மார்ச் 5 :கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்-தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.

கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்-கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்-சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணி--யூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.


கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.
இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்-தலை-வர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்-காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்-கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்-பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும்.

Thursday, March 3, 2011

கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண முறை


பண்டைய தமிழ் நாட்டில் தொழில் முறையில்
இனங்கள் ஏற்பட்டன. வேளாண்மை செய்தவர்கள்
வெள்ளாளர் என்றழைக்கப்பட்டனர். கொங்கு நாட்டில்
வேளாண்மை செய்தவர்கள் கொங்கு வெள்ளாளர்
என்றழைக்கப்பட்டனர். வேளாண்மை செய்தவர் என்ற
பொதுப்பிரிவில் வேளாளக் கவுண்டர்கள் ஒரு பிரிவினர் ஆயினர்.

திருமணங்களும், கொங்கு வெள்ளாளர் திருமணச் சடங்குகளும்:

கொங்கு வெள்ளாளர் திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்று
நாட்கள் நடைபெற்று வந்தன. முதல் நாள், 'நாள் விருந்து'. இந்நாளில்
நெருங்கிய உறவினர் மணமகன், மணமகள் வீட்டார்க்கு விருந்து
செய்வர்.

இரண்டாம்நாள்

உறவினர்களுடன் இணைந்து மண ஏற்பாடுகள் செய்வர்.
பந்தலிடுதல், முகூர்தக்கால் வெட்டுதல், மணமகனுக்குக்
குடிமகன் முடிதிருத்துதல், கொட்டு முழக்கு வாயிலாகத்
திருமணம் நடைபெறத் தொடங்குவதை ஊரார்க்கு அறிவித்தல்,
மணமக்கள் வீட்டில் விருந்திடுதல், மணமகன் மணமகள்
வீட்டிற்குப் புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மணமகள் வீட்டில்தான் மண ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மூன்றாம் நாள்


முகூர்த்த நாள். உரிய சடங்குகள் முடிக்கப்பெற்று மணமக்கள்
மணமேடையில் அமர்த்தப் பெறுவர். மணமகளுக்கு மங்கல
நாண் அணிவிக்கப் பெற்று, மங்கல வாழ்த்து ஓத, திருமணம்
நிறைவுக்கு வரும். விருந்துடன் திருமணம் முடிவுறும்.

திருமண நிகழ்ச்சிகளை இனப் பெரியவர் ஒருவரான
அருமைக்குரியவர் நடத்தி வைப்பார்.


மங்கல வாழ்த்து பாடல்:

பெண் பார்ப்பதில் தொடங்கி, திருமணம் முடியும் வரையிலான
எல்லா நிகழ்ச்சிகளையும் இப்பாடல் தொகுத்துரைக்கிறது. ஒரு
பேரரசன் இல்லத் திருமணத்தை விவரிப்பது போல் பாடல்
கருத்துகள் உள்ளன. இப்பாடல் வழியாக அன்றைய கொங்கு
வெள்ளாளரின் நிலை, உறவு முறை, சமுதாய நிலை பற்றி நன்கு
அறிய முடிகிறது. தமிழ் மக்களின் வாய்மொழி இலக்கியத்தோடு
வைத்து எண்ணப்பெறும் தகுதியை இது பெற்றிருக்கிறது.
அகவலில் அமைந்து, ஒரு தனித்த பண் வகையில் பாடப் பெறுகிறது.

கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு

வெள்ளி : மார்ச் 4, 2011:

கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு

அருள்பரவும் வேளாளர் பயிர்வளர்த்தால் நீதி அந்தணர் வேள்வி வளரும் அன்பினோடு இவர்கள் படைவாளெடுத்தால் வெற்றி அரசர் படைவாள் எடுக்கும் கருது தானியராசி இவர் குவித்தால் வணிகர் கனகராசியெலாம் குவிப்பர் காதலுடன் ஏர்த்தொழில் நடத்தினால் மற்றுள்ளோர்கைத்தொழில் எல்லாம் நடக்கும் உரிய வள்ளத்தில் இவர் அளந்த பின் நாரணன் உயிர்க்கெல்லா படி அளப்பான் ஓதரிய வேளாளர் பெருமையால் அன்றிமற்று உலகில் ஒரு பெருமையுண்டோ?"

கொங்கு வேளாளர்
சங்க இலக்கியங்கள் எல்லாம் கொங்கு வேளாளர்களின் குடியியல்,வாழ்வியல்,உழைப்பு,பண்பாடு,அறிவியல்,மருத்துவ அடிப்படையிலான சடங்குகள்,குணவியல்புகள்,ஆகிய வற்றையெல்லாம் கூறுகின்றன.

13ஆம் நூற்றாண்டில் விஜய ந‌க‌ர‌ப் பேர‌ர‌சு கொங்கு நாட்டை 24 நாடுக‌ளாக‌ப் பிரித்தாண்ட‌து.ஊர்த்த‌லைவ‌ர்க‌ள் பெய‌ரால் ஊர்க‌ள் அமைந்தன. த‌ற்கால அமைப்புப‌டி கோவை, சேல‌ம், க‌ரூர், நாம‌க்க‌ல், ப‌ல்ல‌ட‌ம், ப‌ழ‌னி, தாராபுர‌ம், த‌ர்ம‌புரி ஆகியன கொங்கு நாட்டில் அட‌ங்கி இருந்தன.

இந்திய வ‌ர‌ல‌ற்றில் விடுத‌லைப் போருக்கு முத‌லில் வித்திட்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்தாம்.த‌மிழ் நாட்டில் விடுத‌லைப்போருக்கு முன்னோடியாக இருந்து, வீர‌ம் விளைவித்ட‌வ‌ன் தீர‌ன் சின்ன‌ம‌லை.

தீர‌ன் சின்ன‌ம‌லை க‌ரியான் ச‌ர்க்க‌ரை ம‌ன்றடியாரின் பேர‌ன் ஆவார். மேல‌ப்பாளைய‌ம் காணியாளர் இர‌த்தின‌த்தின் ந‌க‌னாவார்.கி.பி.1756 இல் பிறந்தார். இவ‌ர் அண்ணன் குழ‌ந்தைசாமி, த‌ம்பிசாமி, கிலேதார், குட்டிசாமி ஆகிய மூன்று த‌ம்பிய‌ர்க‌ளை உடைய‌வ‌ர்.இவ‌ர‌து இய‌ற்பெய‌ர் தீர்த்த‌கிரி. வேளாண்குடியில் பிறந்திருந்தாலும் சிறுவ‌ய‌தில் சில‌ம்ப‌ம், வாள், வேல், ப‌யிற்சியில் ஈடுப‌ட்டார். தீர்த்தகிரி த‌ம்பியும், கிலேதாரும் இவ‌ருட‌ன் விட்ட‌ன‌ர். போர்ப் ப‌யிற்சியில் ஆர்வ‌ம்கொண்ட தீர்த்த‌கிரி திப்புவின் ப‌டையில் கி.பி.1775 இல் சேர்ந்தார். த‌ள‌ப‌தியானார். இர‌ண்டாவ‌து, மூன்றாவ‌து போர்க‌ளில் த‌ளப‌தியாக இருந்து ஆங்கில ப‌டைக‌ளை அழித்தார்.

கொங்கு நாட்டு வ‌ரிப்ப‌ணம் திப்புவுக்குச் செல்லாம‌ல் வழி ம‌றித்துப்பிடுங்கினார், ஆங்கிலேய‌ரின் வ‌ரிப‌ணத்தையும் பிடுங்கி கோவை நாட்டில் த‌னி அர‌சு அனமைத்து ஆண்டார். நொய்ய‌ல் ஆற்றின்மேல் க‌ரையில் ஓடாநிலையில் அரண்ம‌னையும், கோட்டைக‌ளையும் க‌ட்டினார்.கி.பி.1779 இல் திப்பு இறந்த‌பின் ஆறு ஆண்டுக‌ள் கொங்கு நாட்டை ஆண்டார். ஆங்கில ஆதிக்க‌த்தை எதிர்த்து நான்குபோர்கள் செய்து வெற்றி பெற்றார். கி.பி.1805 இல் வெள்ளைய‌ரின் வ‌ஞ்ச‌னை வ‌ளையில் சிறைப்ப‌ட்டார். ச‌ங்க‌கிரி கோட்டையில் தூக்கிலிட‌ப்ப‌ட்டார். அவ‌ர‌‌து உயிர்மூச்சு விடுத‌லைப் போருக்கு வித்திட்டது.

பண்டைய‌ கொங்குநாடுகள்‌‌

கொங்குநாடுகள்
இன்றைய‌ ப‌குதிக‌ள்

1).பூந்துறை நாடு
ஈரோடு,திருச்ச‌ங்கோடு.

2)தென்க‌ரை நாடு
தாராபுர‌ம், காங்கேய‌ம்.

3)காங்கேய‌ நாடு
தாராபுர‌ம்,கரூர்.

4)பொங்க‌லூர் நாடு
ப‌ல்ல‌ட‌ம், தாராபுர‌ம்.

5)ஆறை நாடு
கோவை,அவினாசி.

6)வார‌க்கா நாடு
ப‌ல்ல‌ட‌ம் பொள்ளாச்சி

7)திருஆவின் ந‌ன்குடி நாடு
ப‌ழ‌னி, உடும‌லை.

8)ம‌ண நாடு
க‌ரூர் தென்மேற்குப‌குதி

9)த‌லையூர் நாடு
க‌ரூர் தெற்கு, மேற்கு

10)த‌ட்ட‌யூர் நாடு
குளித்த்லை

11)பூவாணிய‌ நாடு
ஓம‌லூர், த‌ர்ம‌புரி

12)அரைய‌ நாடு
ஈரோடு, நாம‌க்க‌ல்

13)ஒடுவ‌ங்க‌ நாடு
கோபி

14).வ‌ட‌க‌ரை நாடு
ப‌வானி

15).கிழ‌க்கு நாடு
க‌ரூர்,குளித்த‌லை

16).ந‌ல்லுருக்காநாடு
பஉடும‌லைப்பேட்டை.

17).வாழ‌வ‌ந்தி நாடு
நாம‌க்க‌ல் வ‌ட‌க்கு, க‌ரூர்

18).அண்ட‌ நாடு
ப‌ழ‌னி தென்கிழ‌க்கு

19).வெங்கால‌ நாடு
க‌ரூர் கிழ‌க்கு

20).காவ‌ழ‌க்கால‌ நாடு
பொள்ளாச்சி

21).ஆனைம‌லை நாடு
பொள்ளாசி தென்மேற்கு

22)இராசிபுர‌ நாடு
சேல‌ம், ராசிபுர‌ம், கொல்லிம‌லை

23).காஞ்சிக் கோயில் நாடு
கோபி, ப‌வானி.

24)குறும்பு நாடு
ஈரோடு

கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.
இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

சமுதாய அமைப்பு

கொங்கு வேளாளர் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து, அந்த குழுக்களை குலங்கள் என்றும், கூட்டங்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட தங்கள் குலத்தை (கூட்டத்தை) சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுக்குள், அதாவது பங்காளிகளுக்குள், திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

 குலதெய்வம்

குல(கூட்ட)ப் பிரிவுகள் சிறுப்பிரிவாக பிரிந்து தங்களும், தங்களுடைய சந்ததிகளும் வழிப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் அவர்களுக்கு பிடித்த சாமி சிலைகளை அமைத்தனர். அந்த சாமிகளை குலதெய்வமாக வழிப்பட ஆரம்பித்தனர். தற்பொழுது பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உரிமை வாரிசுகளாக குலத்தெய்வக் கோவில்களுக்கு உள்ளனர் என்பது சிறப்பு. அவர்களே தங்களுடைய குலத்தெய்வக் கோவில்களை சில வருடங்களுக்கு ஒருமுறை செப்பனிட்டுக் கொள்கின்றனர்.