Sunday, February 3, 2013

தீரன் பாதுகாப்பு படை பயிற்சி முகாம்



இடம் :  கொங்கு கலையரங்கம் , அவினாசி
நாள் : 10-12-2013 ஞாயிற்றுகிழமை
நேரம் : காலை 9 மணி

தலைமை        : இளைஞர்களின்   நாடி துடிப்பு  .திரு .  E .R .ஈஸ்வரன்  அவர்கள்

முன்னிலை    : திரு.V .லோகநாதன்  திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்

வரவேற்புரை : திரு.R .நந்தகுமார் ஒன்றிய இளைஞர்கள் அணி        
                                                                                                                  து.செயலாளர்
வாழ்த்துரை :
                            திரு. K.K.C.பாலு  மாநில பொருளாளர்
                            திரு. இளம்பரிதி  மாநில இளைஞர் அணி செயலாளர்
                            திரு.சக்திகோச்  நடராஜ்  மாநில துணை பொது செயலாளர்
                            திரு. சூர்யமூர்த்தி  மாநில தலைமை நிலைய செயலாளர்
                             திரு.V .பொன்னுகுட்டி மாநில  ஒருங்கிணைப்பாளர் 
                            திரு.ரோபோ ரவி  திருப்பூர் மாநகர செயலாளர்
                            திரு.மாணிக்கராஜ்  கோவை வடக்கு மாவட்ட செயலாளர்
                            திரு.சுதர்சன் கந்தசாமி  திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக
                                                                                                                                 அணி   
                            திரு . விநாயக செல்வம்  மாநில செயற்குழு உறுப்பினர்     
                            திரு . R .A .சுந்தரம் மாநில செயற்குழு உறுப்பினர்
                            திரு . S .கணேஷ்  ஒன்றிய செயலாளர் ,அவினாசி
                            திரு.பூமகள் செல்வராஜ்  ஒன்றிய தலைவர் , அவினாசி
                            திரு.குழந்தையப்பகவுண்டர் விவசாய அணி செயலாளர்
                            திரு.மணி (எ) ராமசாமி  ஒன்றிய துணை தலைவர் , அவினாசி 
                            திரு.சீனிவாச மூர்த்தி  ஒன்றிய செயலாளர்,ஊத்துக்குளி
                            திரு.பாலு  ஒன்றிய அமைப்பாளர் . திருப்பூர் வடக்கு
                            திரு. மெடிக்கல் மூர்த்தி  அவினாசி நகர செயலாளர்
                            திரு. அவிநாசியப்பன் ஒன்றிய பொருளாளர்
                            திரு.நடராஜ்  சேவூர் வட்டார செயலாளர்
                            திரு. சென்னியப்பன்  ஒன்றிய து.செயலாளர் ,அவினாசி
                            திரு. ராயப்பன் ஒன்றிய து.செயலாளர் ,அவினாசி

நன்றியுரை :  திரு . A .ரவி சங்கர்  ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்  
   

Wednesday, December 12, 2012

அவினாசி ஒன்றிய கொடியேற்று விழா



( 09.12.2012) ஞாயிற்றுகிழமை அவினாசி ஒன்றியத்தில்( செம்பியநல்லூர் ,நம்பியாம்பாளையம், கருவலூர்,உப்பிலிபாளையம் , ராமநாதபுரம் மற்றும் கானூர் பஞ்சாயத்துகளில்) கொடியேற்று விழா நடைபெற்றது ... நமது கொங்குநாட்டு தளபதி ஈ .ஆர். ஈஸ்வரன் அவர்கள்  அனைத்து கிளைகளிலும் கொடியேற்றினார் ....
மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னுகுட்டி தலைமை தாங்கினார் .

மாநில அவைத்தலைவர் B.R.T.சென்னியப்பன் ,
மாநில பொருளாளர்  K.K.C. பாலு ,
மாநில தலைமை நிலைய செயலாளர்  சூர்யமூர்த்தி ,
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்  V .லோகநாதன்
ஒன்றிய செயலாளர்  கணேசன் ,
ஒன்றிய தலைவர் பூமகள் செல்வராஜ் ,

நகர செயலாளர்  மூர்த்தி ,
மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  சுதர்சன் கந்தசாமி ,
மாவட்ட செயற்குழு  உறுப்பினர்  விநாயக செல்வராஜ் ,
மாவட்ட செயற்குழு  உறுப்பினர் R .A .சுந்தரம் ,
ஒன்றிய மாணவரணி செயலாளர் A .ரவி சங்கர்
ஒன்றிய பொருளாளர்  அவினாசியப்பன்,
ஒன்றிய துணை செயலாளர் சென்னியப்பன் ,
 ஒன்றிய துணை செயலாளர் ராயப்பன்   ஆகியோர் முன்னிலை வகித்தனர் ..

Wednesday, August 15, 2012

ஆகஸ்ட் 7  ஆம் தேதி காலை 4  மணி அளவில் அவினாசி  ஒன்றிய கட்சி அலுவலகத்தில் மர்ப நபர்களால் தீ வைக்கபட்டது . தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S .கணேஷ் , R  . A . சுந்தரம் , விநாயக செல்வம் , அவினசியப்பன் , சுதர்சன் கந்தசாமி , மெடிக்கல் மூர்த்தி , ரவிசங்கர் , ராஜ் மாணிக்கம்  மற்றும் பல  நிர்வாகிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் பின்பு தீயணைப்பு  துறையினர்  விரைந்து வந்து தீயை அணைத்தனர்  அதன் பின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்  விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர் , கோவை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர் . பின்பு அனைத்து நிர்வாகிகளும் சென்று நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் மனு கொடுக்கப்பட்டது . அன்று  மாலை சக்தி கோச்  நடராஜ், சூர்யமூர்த்தி , K.K.C. பாலு , இளம்பரிதி , சந்திரசேகர் , விசா சண்முகம் , மாணிக்கராஜ் , ரோபோ ரவி , தம்பி வெங்கடாசலம் , ஆத்தூர் ரமேஷ் , விஸ்வநாதன் மற்றும் பல மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் பாதிப்படைந்த அலுவலகத்தை பார்வையிட்டனர்.

Wednesday, April 18, 2012

சென்னை கிண்டியில் தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாள் விழா





சென்னை  கிண்டியில்   தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது ...... கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி , கழக பொது செயலாளர்   E .R .ஈஸ்வரன் , கழக பொருளாளர்  பாலசுப்ரமணியம் , கொங்கு வேளாளர்  கவுண்டர்  பேரவை தலைவர்  தேவராஜ் அய்யா மற்றும் பல மாநில , மாவட்ட , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ... பின்னர் தீரன் சின்னமலை  சிலைக்கு  தலைவர்கள்  மாலை அணிவித்தனர் .... அதன் பின் சைதாபேட்டையில்  கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பாக  கூடங்குளம்  மின் பிரச்சனைக்காக  ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது .. 5000 பேர்க்கு  மேலாக ஆர்பாட்டத்தில்  கலந்து கொண்டனர் .... அவினாசி  ஒன்றியத்தின் சார்பாக  V .லோகநாதன் , விநாயக செல்வம் , R .A .சுந்தர், மெடிக்கல் மூர்த்தி , S .கணேஷ் ,அவினசியப்பன் ,  ரவி சங்கர் , சுந்தர் , கோவிந்தராஜ் , ரமேஷ் , ஸ்ரீதர் , சதீஷ் , முருகேஷ் ,ஆனந்த் , ராயப்பன்  மற்றும் கிளை நிர்வககள் உள்பட 70  பேர் கலந்து கொண்டனர் .......

நன்றி ! நன்றி !  
கொங்கு சங்கர் 

Friday, March 9, 2012

மின்வெட்டை கண்டித்து அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்



அவினாசி ஒன்றிய , நகர  கொங்குநாடு முன்னேற்ற கழகம்  சார்பாக , தமிழ்நாட்டில்  நிலவிவரும்  அபரிமிதமான  மின்வெட்டு  மற்றும்  பல்வேறு  பிரச்சனைகள்  சம்மந்தமாக 09 /03 /2012  அன்று  காலை 09 -00  மணியளவில்  அவினாசி பாலச்சந்தர்  மருத்துவமனை  அருகில் " மாபெரும்  ஆர்ப்பாட்டம் " நடைபெற்றது .
                               ஆர்ப்பாட்டத்திற்கு கொ.மு.க மாநில ஒருங்கிணைப்பாளர்  திரு.பொன்னுகுட்டி அவர்கள்  தலைமை  தாங்கினார் , மாநில செயற்குழு  உறுப்பினர் திரு.விநாயக செல்வராஜ் , திருப்பூர்  வடக்கு மாவட்ட  செயலாளர்  திரு.V . லோகநாதன் ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  திரு.சுதர்சன் கந்தசாமி , ஒன்றிய தலைவர் திரு.S .செல்வராஜ்  ,ஒன்றிய  செயலாளர் 
திரு.S . கணேசன் , ஒன்றிய பொருளாளர்  திரு . S .அவினசியப்பன் ,ஒன்றிய மாணவரணி செயலாளர் கொங்கு சங்கர் மற்றும் திருப்பூர் மாநகர செயலாளர்  திரு.ரோபோ ரவி  ஆகியோர்  முன்னிலை வகித்தனர் .
                              சிறப்பு  அழைப்பாளராக மாநில துணை பொருளாளர் 
திரு.G .K .நாகராஜ் அவர்கள்  கலந்து கொண்டனர் . ஆர்பாட்டத்தில் பின்வரும்  கோரிக்கைகள்  முன்வைத்து  முழக்கங்கள்  எழுப்பப்பட்டன .
  • தமிழ்நாட்டில்  நிலவிவரும்  அபரிமிதமான  மின்வெட்டை  உடனடியாக  தளர்த்தி  தடையில்லா மின்சாரம்  வழங்கவேண்டும் .
  •  விசைத்தறி , பனியன்  தொழில்களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் .
  • விவசாய் விளைபொருட்களுக்கு மாநில அரசு நியாயமான விலைநிர்ணயம்  செய்யவேண்டும் .
  •  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை  விவசாயத்திற்கு பயன்படுத்த  ஆவண செய்ய வேண்டும் .
ஆர்பாட்டத்தில்  திரளான  மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர,கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . ஒன்றிய பேச்சாளர் திரு .ஜெயச்சந்திரன் நாயக்கர் நன்றி  கூறினார் .
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்
                                                                                                

Wednesday, March 7, 2012

கொங்கு நாட்டு காவலர் திரு. பெஸ்ட் ராமசாமி அய்யா அவர்களின் 68 வது பிறந்தநாள்




இன்று   68 வது பிறந்தநாள் காணும்  நமது கொங்கு நாட்டு  காவலர் திரு. பெஸ்ட் ராமசாமி அய்யா  அவரை  வாழ்த்த வயதின்றி  வணங்குகிறோம் ....அவரின்  அயராத  உழைப்பு  கொங்கு நாட்டிற்கு  தேவை .... அவர் பல்லாண்டு  வாழ எல்லாம்  வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்..........
நன்றி! நன்றி !      
கொங்கு சங்கர் 





Monday, March 5, 2012

அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்


  •  தமிழ்நாட்டில் (சென்னை  தவிர ) நிலவி வரும் அபரிமிதமான  மின்வெட்டை உடனடியாக தளர்த்தி  தடையில்லா மின்சாரம் வழங்க  மாநில அரசை கோரியும் , கரும்பு  மஞ்சள் உட்பட...... 
  •  விவசாய்  விளைபொருட்களுக்கு  மாநில அரசு நியாயமான  விலை  நிர்ணயம்  செய்யகோரியும் ......
  •  விசைத்தறி , பனியன்  தொழில்களுக்கு  தடையில்லா மும்முனை  மின்சாரம்  வழங்ககோரியும் .......
  •  ஊரக  வேலைவாய்ப்பு  திட்டத்தை  விவசாயத்திற்கு பயன்படுத்த  கோரியும் ........
                     மாபெரும்  ஆர்பாட்டம்  நடைபெறுகிறது . எனவே , ஒன்றிய  நகர  கொ.மு .க வினர் , பொதுமக்கள் , பொது நலன்  நாடுவோர்  அனைவரும்  தவறாது கலந்து கொண்டு ஆதரவு  தர வேண்டுகிறோம் ....
  
நன்றி ! நன்றி !   
கொங்கு சங்கர் 

Saturday, March 3, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாபெரும் ஆர்பாடாம்

வருகின்ற  மார்ச் 9 ஆம் தேதி  (வெள்ளி கிழமை) "அபரிமிதமான  மின்வெட்டுக்கு மற்றும் விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி" ஆர்பாட்டம் .

 தேதி :  09.03.2012
 இடம்  : பாலச்சந்தர்  மருத்துவமனை , அவினாசி 
 நேரம் : காலை 9  மணி  

நன்றி !! நன்றி !! 
கொங்கு சங்கர்
 

Sunday, February 26, 2012

கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு கூட்டம்


அவினாசி ஒன்றியம் கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு  கூட்டம்  கருவலூர்  கொங்கு மண்டபத்தில் இன்று ( 26.2.2012) மாலை 6  மணிக்கு  நடைபெற்றது . கூட்டத்திற்கு  திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
 V . லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S . கணேசன் , மற்றும் ஒன்றிய  கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் . கூட்டத்தில் கருவலூர் வட்டார  நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டு அறிவிக்க பட்டது .

 கருவலூர்  ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : N .ரங்கசாமி 
செயலாளர்  : A .பழனிசாமி  

உப்பிலிபாளையம்   ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : கந்தசாமி
செயலாளர்  : M .சிவசாமி 

ராமநாதபுரம்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : P .சண்முகம்

செயலாளர்  : M .மணி (எ ) நாராயணசாமி 

கானூர்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : A.சிவசுப்ரமணியம்

செயலாளர்  : P .வேலுசாமி 

நம்பியாம்பாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       : ராமசாமி

செயலாளர்   : M .குருசாமி 

வேட்டுவபாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       :  ஆண்டவ மூர்த்தி 

செயலாளர்   :   சுப்பிரமணியம் 


வட்டார பிரதிநிதிகள் 

செயலாளர்  : M .தர்மராஜ் 
 மயில்சாமி 
 நந்தகுமார்
 S .சம்பத் 
 S .காந்தி  

                                                                                                                                 நன்றி 
                                                                                                                        கொங்கு சங்கர் 
                                

Sunday, February 19, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் கலந்தாய்வு கூட்டம

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  அவினாசி ஒன்றியம்  மற்றும்  நகர  கலந்தாய்வு  கூட்டம்  " பூவாசாமி கவுண்டர்  நினைவு "  திருமண  மண்டபத்தில்  19.02.2012(நேற்று ) மாலை 3 மணிக்கு  நடைபெற்றது.
 கூட்டத்தில்.......
              
  •  ஒன்றிய  நகர  நிர்வாகிகள்  தேர்வு .
  • அபரிமிதமான  மின்வெட்டுக்கு  எதிரான  ஆர்ப்பாட்டம் பற்றிய  ஆலோசனை .
  •  விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் .  
போன்ற   விசயங்கள் குறித்து  கலந்தாய்வு  மேற்கொள்ளப்பட்டது . கூட்டத்தில்  V.லோகநாதன் , S . கணேஷ் , விநாயக செல்வம் , R .A .சுந்தரம் , மெடிக்கல் மூர்த்தி , அவினசியப்பன் , சேயூர்  நடராஜ் , குழந்தையப்பா கவுண்டர், ராயப்பன் , பூமகள்  செல்வராஜ் , மாணிக்கம் , P.K.ராஜ்  மற்றும்  ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் .

இறுதியில்  அவினாசி  ஒன்றிய  செயலாளராக  சங்கம்பாளையம்  S .கணேஷ்  அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார். 
வருகின்ற  மார்ச் 9 ஆம் தேதி   "அபரிமிதமான  மின்வெட்டுக்கு மற்றும் விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி"  ஆர்ப்பாட்டம் .  
                                                     நன்றி ! நன்றி ! 

Saturday, February 18, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் 4 ஆம் ஆண்டு விழா


திருப்பூர் வடக்கு மாவட்டம்  அவினாசி  ஒன்றியத்தில் கொங்குநாடு  முன்னேற்ற கழகத்தின்   4 ஆம் ஆண்டு விழா  கொடியேற்றி சிறப்பாக கொண்டாடபட்டது...விழாவில்  வடக்கு மாவட்ட செயலாளர்  V.லோகநாதன் , விநாயக செல்வம் ,  R.A.சுந்தரம் , அவினாசியப்பன் , ரவி சங்கர் மற்றும்  ஒன்றிய  கிளை நிர்வாகிகள்  கலந்து  கொண்டனர் .

Thursday, January 5, 2012

முல்லை பெரியாறு பிரச்சனைகாக தேனியில் கொ.மு.க ஆர்பாட்டம்

முல்லை  பெரியாறு பிரச்சனைக்காக கொங்கு நாடு  முன்னேற்ற கழகத்தின்  பொது செயலாளர்  E.R.ஈஸ்வரன்  அண்ணன்  தலைமை யில் , கழகத்தின்  பொருளாளர்  பாலாசுப்ரமணியம்  மற்றும் பேரவையின் தலைவர் திருச்சி  தேவராஜ்  அய்யா  அவர்களின் முன்னிலையில் நாளை (07.01.2012) தேனியில்  ஆர்ப்பாட்டம் .

இடம்  : பகவதி அம்மன்  கோவில் , தேனி

 நாள் : 07.01.2012(நாளை )

 நேரம் : மதியம் 2  மணிக்கு

 அனைவரும்  வாரீர் !!





Wednesday, December 28, 2011

கோவை செழியன் அய்யா அவர்களின் 81 வது பிறந்த நாள்

கொங்கு நிறுவனர்,கோவை செழியன் அய்யா அவர்களின் பொன்மொழிகள்:


ஒரு சாதியின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் சங்கம் பயன்படுமேயானால், அதை நாம் வரவேற்க வேண்டும். கொங்கு வேளாளர்களிடையே முன்னேற்றத்தையும், கொங்கு நாட்டு மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்.

இந்தியா என்பது கிராமங்களில்தான் உள்ளது. அந்த கிராமத்து உயிர்களால் தான் நாடே வாழ முடியும் என்பது அடிப்படை உண்மை. இது பெரிய படிப்பாளிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்னமும் கிராம மக்களுக்கு முன்னேற்றம் என்பது கனவாகவே உள்ளது. ஆட்சியாளர்கள் விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வில்லை. நம்முடைய பரம்பரை தொழிலே விவசாயம் தான். ஒரு காலத்தில் விவசாயத் தொழிலுக்கு மதிப்பும், மரியாதையும், பெருமையும் இருந்தது. வள்ளுவர் கூட உலகமே உழவர்கள் பின்னால் இருப்பதாக கூறினார். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற தொழில்களிலே மிகவும் மோசமான தொழிலாக விவசாயம் வந்து விட்டது. இந்நிலை மாற வேண்டும். மேலும் இந்தியாவின் ஒரு பகுதி மழை பெய்து வெள்ளத்தால் அழிகிறது. மற்றொரு பகுதியில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எதிர்கால நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்படும் ஆட்சி இல்லாததுதான் இதற்கு காரணமாகும்.

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சாதிவாரியாக கணக்கெடுத்து அந்த மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பெரும்பான்மையாக உள்ள நமது இனத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பணிகளில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலும், அரசின் நலத் திட்டங்களும் நம்மை முழுமையாக வந்து சேரும்.

இன்னும் பல,

-கொங்கு நிறுவனர்,கோவை செழியன் அய்யா அவர்கள்.!
 
முடியும் முடியும் நம்மால் முடியும்

கொங்கு செழித்தல்....!!!!
எங்கும் செழிக்கும்....!!!! 

Tuesday, March 22, 2011

2011 சட்டமன்றத் தேர்தலில் , கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்

            சூலூர்  சட்டமன்றத்  தொகுதி  வேட்பாளர் 



பெயர்                  :        E .R .ஈஸ்வரன்  B.E .,                                                     
வயது                  :        50 
பெற்றோர்         :       இராமசாமி கவுண்டர் - முத்தாயி
மனைவி            :       திருமதி. நளினி  ஈஸ்வரன் 
குழந்தைகள்     :      சுஷ்மிதா , ஸ்வருபா
தொழில்             :       கட்டுமானம் , ஏற்றுமதி  ஆடை தயாரிப்பு 
கல்வி தகுதி     :       B.E .,  (Mech ) 





பெயர்                      :             K . பாலசுப்ரமணியம்                                             
வயது                      :             61
பெற்றோர்             :             P .P .கந்தசாமி கவுண்டர் - கந்தம்மாள் 
மனைவி                :             திருமதி . பத்மா
குழந்தைகள்         :             பிரபு , கார்த்திக்
தொழில்                 :             கனரக இயந்திர பாகம் , கோழி பண்ணை
கல்வி தகுதி         :             Engineer 


நாமக்கல்  சட்டமன்ற தொகுதி  வேட்பாளர் 


பெயர்                   :         R . தேவராசன்                                                   
வயது                   :         70
பெற்றோர்          :        போத்தி. இராமசாமிகவுண்டர்  - காளியம்மாள்
மனைவி             :        திருமதி . பழனியம்மாள்
குழந்தைகள்      :        இரு மகள்கள் , ஒரு மகன்
தொழில்              :         கட்டுமானத் தொழில் , டிரான்ஸ்போர்ட் 

     
  பெருந்துறை  சட்டமன்ற  தொகுதி  வேட்பாளர் 


பெயர்                      :        K .K .C . பாலு
வயது                      :        50
பெற்றோர்             :       K .K .C .சென்னியப்பன் - சரஸ்வதி
மனைவி                :       திருமதி .சித்திரகலா 
குழந்தைகள்         :       நந்தா 
தொழில்                 :       K .K .C . ட்ரான்ஸ்போர்ட்
கல்வி தகுதி         :       B.E ., ( ECE )


பொள்ளாச்சி  சட்டமன்ற  தொகுதி  வேட்பாளர் 


பெயர்                      :       நித்யானந்தம் 
வயது                      :      39
பெற்றோர்             :      B.கிருஷ்ணசாமி கவுண்டர்  
மனைவி                :      திருமதி. வனிதா 
குழந்தைகள்         :      ஷிவாணி
தொழில்                 :      ரியல் எஸ்டேட் , விவசாயம் 
கல்வி தகுதி         :     D.M.E ., B.E 
உடுமலை சட்டமன்ற  தொகுதி  வேட்பாளர் 


பெயர்                      :      T. இளம்பரிதி
வயது                      :      50
பெற்றோர்             :     தி . திருமலைசாமிக் கவுண்டர் 
மனைவி                :     திருமதி . சாந்தி
குழந்தைகள்         :    கோகுல் 
தொழில்                 :     விவசாயம்
கல்வி தகுதி         :     D.M.E ., B.E


Wednesday, March 16, 2011

கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள்

மார்ச் 16 : கொமுக போட்டியிடும் தொகுதிகள்  இரவு 8  மணிக்கு  சென்னை  அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்பட்டது . இதில்  கொமுக வுக்கு

1 . சூலூர்
2 .பல்லடம்
3 . பொள்ளாச்சி
4 .உடுமலைபேட்டை
5 .பெருந்துறை
6 .கோபி
7 .நாமக்கல்
ஆகிய  தொகுதிகள்  ஒதுக்கப்பட்டன ..வேட்பாளர்  பட்டியலை  நாளை அல்லது  நாளை மறுநாள்  வெளியிடப்படும்  என  கொமுக மாநில தலைவர்  திரு.பெஸ்ட் ராமசாமி  கூறினார் .....

 

திமுக வுடன் கூட்டணி ஏன்- மாநில கொமுக பொருளாளர் விளக்கம்

Monday, March 14, 2011

கோவை செழியன் அய்யா அவர்களின் 11 ம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் பொது கூட்டம்


காங்கேயம் அடுத்தே  உள்ள  குங்கேரிபாளயத்தில்  மறைந்த  நமது  தலைவர்  அமரர்  கோவை செழியன் அய்யா அவர்களது  11 ம் ஆண்டு  நினைவஞ்சலி   காலை  11  மணிக்கு  நடைபெற்றது .. கூட்டத்திற்கு  நமது கழக  தலைவர் கொங்கு நாட்டு  காவலர்  திரு பெஸ்ட்  ராமசாமி  ஐயா , கழக செயலாளர் எழுச்சி  நாயகன் திரு E .R . ஈஸ்வரன் அண்ணன் ,  கழக பொருளாளர்  மக்கள்  நாயகன்  திரு  பாலசுப்ரமணியம் , காங்கேயம் சட்டமன்ற  தொகுதி  MLA  திரு . விடியல்  சேகர்  மற்றும்  மாநில , மாவட்ட , ஒன்றிய , கிளை  நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர் . அவினாசி  ஒன்றியம்  சார்பிலே  V.லோகநாதன் ( ஒன்றிய  செயலாளர் )   , A . ரவி சங்கர்( ஒன்றிய மாணவரணி ) உள்பட 30 பேர்  கலந்து கொண்டனர் .. 
  
பிறகு  நமது தலைவர்கள்  மறைந்த  நமது  அமரர்  கோவை செழியன்  அவர்களுக்கு  அஞ்சலி  செலுத்தினார்கள் . 
பின்னர்  நினைவஞ்சலி  கூட்டம்  நடைபெற்றது  ..கூட்டத்தில்  தலைமை  நிலைய செயலாளர்  சூர்யமூர்த்தி  வரவேற்புரை  வழங்கினார் .. பின்னர்  
காங்கேயம் சட்டமன்ற  தொகுதி  MLA  திரு . விடியல்  சேகர்    சிறப்புரையாற்றினார் பின்னர்  கழக தலைவர் கொங்கு நாட்டு  காவலர்  
திரு பெஸ்ட் ராமசாமி ஐயா , கழக செயலாளர் எழுச்சி  நாயகன் திரு E .R . ஈஸ்வரன் அண்ணன் ,  கழக பொருளாளர்  மக்கள்  நாயகன்  திரு  பாலசுப்ரமணியம் அவர்கள்  பேருரையற்றினார்கள்.. பிறகு 2  மணியளவிலே  நினைவஞ்சலி  கூட்டம்  நிறைவுபெற்றது .....